வைகாசி விசாக சிறப்புகள்
Page 1 of 1
வைகாசி விசாக சிறப்புகள்
* மாதம் தோறும் விசாக நட்சத்திரம் வந்தாலும், தமிழ் மாதமான வைகாசியில் வரும் இந்த நட்சத்திரம் வைகாசி விசாகம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
* வைகாசி விசாகம் தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றல், அன்றைய தினம் அவர் அவதரித்தார்.
* இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக திருச்செந்தூரில் இந்த விழா இன்னும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
* வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய ஸ்தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.
* எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான். இந்த நாளில் எமதர்மனுக்கு தனிபூஜை செய்கிறார்கள். அவ்வாறு பூஜை செய்வதால் நோய்கள் நீங்கும், நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்.
* ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். அவர் பிறந்ததும் வைகாசி விசாக நாளில்தான்.
* குழந்தை பாக்கியத்திற்காக கோயில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் அந்த் பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.
* இந்ந ஆண்டு ஜு 13-ந் தேதி வைகாசி விசாகம் வருகிறது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக பூஜை
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக பூஜை
» வைகாசி விசாக விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum