பதினெட்டு படிகளின் சிறப்பு
Page 1 of 1
பதினெட்டு படிகளின் சிறப்பு
1. விஷாதயோகம் : பிறப்பு என்பது நிலையற்றது. இது துன்பம் நிறைந்தது. முன்பிறப்பின் பயன்களை எண்ணி வருந்தி மீண்டும் பிறப்பறுக்க - முக்தியடைவதற்கு துடிக்கும் ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் என்னும் முதற்படியாகும்.
2. ஸாங்கிய யோகம் : வைராக்கிய சிந்தையுடன் முதற்படியை அடைந்தவர்கள் பரமான்மாவையே குருவாக எண்ணி ஆன்ம உபதேசத்தைப் பெறுவது ஸாங்கிய யோகம் என்னும் இரண்டாவது படியாகும்.
3. கர்ம யோகம் : ஆத்ம உபதேசம் பெற்றப்பின் ஆத்ம ஞானம் பெறுவதற்கான மனப் பக்குவம் பெற வேண்டி அவரவர் வாழ்க்கைச் செயல்களை செவ்வனச் செய்து தமக்கென எந்தப் பயனையும் கருதாது பிறர்க்கு செய்யும் செயலே கர்ம யோகம் எனப்படும் மூன்றாவது படியாகும்.
4. ஞான கர்ம ஸன்யாஸ யோகம் : முற்பிறப்பின் ஊழ்வினையால் வந்த கர்மங்களையும் வேதம் புகட்டும் புண்ணியத் கர்மங்களையும் தனக்கென்று அல்லாது பற்றற்றுச் செய்து பரமனை அடைய மேற்கொள்ளும் ஞானமே ஞான கர்ம ஸன்யாச யோகம் என்ற நான்காவது படியாகும்.
5. ஸந்யாஸ யோகம் : வேதம் வகுத்த விதியின்படி கருமங்களைப் பற்றின்றி செய்து வருகிறேன். செய்யும் கர்மங்கள் அனைத்தும் சிறந்த வேள்விகளாகின்றன. என்னும் அகங்காரம் - மமகாரங்கள் ஏதும் இன்றிச் செய்யும் கர்மங்களே ஸ்ந்யாச யோகம் எனப்படும் ஐந்தாவது படியாகும்.
6. தியான யோகம் : ஆண்டவனை நோக்கி தியானத்தில் அமரும் யோகியான வன், ஏகாந்தமான தனித்த இடத்தில் தர்பை, அல்லது தோல் ஏதாவது ஒன்றின் மீது அமர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆத்மாவில் ஐக்கியப் படுத்துவதே தியான யோகம் எனப்படும் ஆறாவது படியாகும்.
7. ஞான யோகம் : இப்பூவுலகில் காணப்படும் எல்லாம் மாய சக்தியுடன் கூடிய பிரம்மமே! என்று உணர்வதே ஞான யோகம் எனப்படும் ஏழாவது படியாகும்.
8. அடசரப் பிரம்ம யோகம்: பூவுலகில் காண்பவனை எல்லாம் பிரம்மம் என் றுணர்ந்து முதுமையில் தன்னுயிர் பிரியும் காலையும் சதா எந்த சிந்தனையும் இன்றி இறைவனை எண்ணி தியானிப்பதே அட்சர பிரம்ம யோகம் என்னும் எட்டாவது படியாகும்.
9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் : கடவுளை நினைத்து தியானம் செய்தாலும், பிறருக்கு நல்ல காரியங்கள் செய்து உதவினாலும் எல்லாம் இறைவனுக்காகச் செய்து சமர்ப்பணம் செய்து ராஜவித்யா - ராஜ குஹ்ய யோகம் எனப்படும் ஒன்பதாவது படியாகும்.
10. விபூதி யோகம் : அழகிலும் - அறிவிலும் - ஆற்றலிலும் ஒளியிலும் இன்னும் பற்பல சிறப்பான தெய்வீகக் குணங்கள் எவை எவை உண்டோ அவையெல்லாம் கடவுளின் படைப்புகள் என்று உணர்ந்து அவற்றுள் கடவுளைக் காண்பது விபூதி. யோகம் எனப்படும் பத்தாவது படியாகும்.
11. விஸ்வரூபதர்சன யோகம் : சிறந்தப் பொருட்களை இறைவனாகக் காணும் ஞானிகள் எல்லாவற்றையும் இறைவனாகவே எண்ணிடும் ஆத்ம ஞானிகளே விஸ்வரூபதர்சன யோகம் எனப்படும் பதினொன்றாவது படியா கும்.
12. பக்தி யோகம் : ஞானேந்திர மனங்களால் இந்திரிய கூட்டத்தை ஒடுங்க வைத்து எல்லாமும் பிரம்மம் என்றுணர்ந்து இன்பம் - துன்பம், வெறுப்பு - விருப்பு, வெப்பம்-குளிர், என்ற பாகுபாடற்ற சமத்துவத்தை அடைவது பக்தியோகம் எனப்படும் பன்னிரண்டாவது படியாகும்.
13. ஷேத்திரக்ஞ விபாக யோகம் : எல்லாருடைய உடல்களிலும் கோயிலாகக் குடிக்கொண்டு அமர்ந்து இயக்குவது ஆண்டவனே என்று அறிவதே - ஷேத்திரக்ஞ வியாபக யோகம் எனப்படும் பதிமூன்றாம் படியாகும்.
14. குணத்ர விபாக யோகம் : மாயையால் உண்டான இந்த உடலில் சத்துவம் - ராஜசம் தாமசம் என்னும் மூன்று குணங்களால் ஏற்படுகின்ற உணர்ச்சியின் உந்துதலால் ஏற்படுகின்ற செயல்கள் எல்லாம் ஆன்மாவாகிய ஆண்டவனின் செயலால் ஏற்படுகின்ற செயல்கள் அல்ல என்றும், பிறப்பு-மூப்பு- இறப்பு ஆகியத் துன்பங்களை எல்லாவற்றையும் அகற்றி ஆத்மானத்தை அனுபவிப்பதே குணத்ரய விபாகயோகம் எனப்படும் பதினான்காவது படியாகும்.
16. தெய்வாஸ்ர ஸம்பத் விபாக யோகம்- தெய்வாம்சம் எனப்படுகின்ற சிறந்த நல்ல குணங்களை நம்முள் வளர்த்து ராஸச குணம் என்னும் தீயக் குணங்களை ஒழிப்பதே தெய்வாசுர சம்பத் விபாக யோகம் எனப்படும் பதினாறாவது படியாகும்.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்:- பிரம்ம ஞானத்தை மேற்கொள்ளுபவர் உலகம் உய்யும் பொருட்டு சாத்வீகச் செயல்களை சிரத்தையுடன் எல்லாம் பிரம்ம மயம் என்றுணர்ந்து பிரபிரம்ம ஞானத்தைப் பெறுவது சித்தாத்ரய விபாக யோகம் எனப்படும் பதினேழாவது படியாகும்.
18. மோட்ச ஸந்யாச யோகம்:- பரபிரம்மத்தை அடைய விரும்புபவர்கள், ஆசிரமங்களும், வர்ணங்களும் உரிய தர்மங்களும்- என்னென்ன என்று ஆராய்வதை விடுத்து உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் எங்குமாய்- எல்லாமுமாய் உள்ள ஐயப்பனிடம் சமர்ப்பணம் செய்து அய்யன் சொல்லியவற்றைத் தவிர வேறேதும் இல்லை என்றுணர்ந்து அவனையே சரணமாக அடைவது மோட்ச ஹந்யாச எனப்படும் பதினெட்டாம் படியாகும்.
இதனை மனதிற்கொண்டு ஐயப்பனிடம் செல்லும் பக்தர்கள் ஒவ்வொருஆண்டும் அந்தப் பதினெட்டுப்படிகள் சொல்லும் தத்துவத்தை தன்மயமாக்கிக் கொண்டால் "ஐயப்பனின் அருள்யோகத் தத்துவங்களை அடுத்து அதன்படி வழிபட்டு எல்லா நலமும் பெற வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பதினெட்டு படிகளின் சிறப்பு
» பதினெட்டுப் படிகளின் சிறப்பு
» 18 படிகளின் தத்துவம்
» 18 படிகளின் தத்துவம்
» 18 படிகளின் தத்துவம்
» பதினெட்டுப் படிகளின் சிறப்பு
» 18 படிகளின் தத்துவம்
» 18 படிகளின் தத்துவம்
» 18 படிகளின் தத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum