நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு அட்வைஸ்
Page 1 of 1
நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு அட்வைஸ்
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வயதுக்கு வருவதும், டீன் ஏஜும் கல்யாணமும், குழந்தை பிறப்பும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம்தான் மெனோபாஸ் எனப்படுகிற இந்த மாதவிலக்கு நிற்கும் காலகட்டமும். ஓவரியின் செயல்பாட்டுத் திறன் சுருங்கி அங்கிருந்து வரவேண்டிய, மாத சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும் குறைந்து, சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு ஆவதில்லை.
வெளிநாட்டுப் பெண்கள் மெனோபாஸக்குக் கூடுதல் கவனம் தருவார்கள். அதிலும் ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி எனப்படுகிற ஹெச்.ஆர்.டி க்குப் பயங்கர மரியாதை. உடலில் குறையும் ஹார்மோனை வெளியிலிருந்து தத்தெடுப்பதுதான் ஹெச்.ஆர்.டி.! இது எதற்கு என்றால், ஹார்மோன்களின் உற்பத்தி குறைந்தோ, தீர்ந்தோ போவதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
முக்கியமாக, ஹாட் ஃப்ளஷ் எனப்படுகிற வெப்ப ஊற்றுப் பிரச்னையால் எண்பது சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுக்க வெப்பம் பரவுவது போல ஒரு உணர்வு தோன்றுவதைத்தான் ஹாட் ஃப்ளஷ் என்கிறோம். வியர்வை ஊற்றாகப் பெருகும். ஐந்து முதல் பத்து நிமிடங்களில் இந்த உணர்வு மறைந்து உடல் நார்மலாகிவிடும்.
சிலருக்கு ஒரு நாளைக்கு ஒன்று முதல் பதினைந்து முறை கூட இது போல ஏற்படலாம். சிலர் சாதாரணமான வேலைகூட செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த ஹெச்.ஆர்.டி. ஒரு வரப்பிரசாதம். இதில், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே இதற்கான மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தனியாக பயணம் செய்யும பெண்களுக்கு அட்வைஸ்
» தனியாக பயணம் செய்யும பெண்களுக்கு அட்வைஸ்
» கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
» வானியல் அதிசயம்: சூரியனை கடக்கும் வெள்ளி
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
» தனியாக பயணம் செய்யும பெண்களுக்கு அட்வைஸ்
» கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
» வானியல் அதிசயம்: சூரியனை கடக்கும் வெள்ளி
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum