தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருப்பையில் தோன்றும் பிரச்சினைகள்

Go down

கருப்பையில் தோன்றும் பிரச்சினைகள் Empty கருப்பையில் தோன்றும் பிரச்சினைகள்

Post  meenu Wed Jan 23, 2013 1:29 pm


கருப்பையில் தோன்றும் பல்வேறு பாதிப்புகளை புற நோயாளிகள் பிரிவிலேயே மருத்துவர்கள் சரி செய்து விடுகிறார்கள். சிலவற்றுக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றனர்.

பைப்ராய்டுகள்......

கருப்பையில் தோன்றும் இந்த நார்த்திசுக்கழலைகள், கருப்பைக் குழாயானது கருப்பையோடு இணையும் இடம் வரையில் கருப்பைக் குழி முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்ததால் இவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மற்றபடி சிறிய அளவில் இருந்தால் இதனால் கருத்தரிப்பதில் எந்தவிதமான பாதிப்பு இருப்பதில்லை.

இக்கழலைகளுக்கு கருப்பையிலிருந்து ரத்த ஓட்டம் கிடைப்பதால் இவை மற்ற உறுப்புகளை போலவே வளருகின்றன. இவ்வளர்ச்சி கருப்பையை பாதிக்கிற அளவில் இருந்தால் மைக்ரோ சர்ஜரி மூலம் பாதிப்பில்லாமல் அகற்றிவிட்டு, கருப்பையை சுத்தப்படுத்தலாம்.

பிறவிக்குறைபாடுகள்.....

ஹைபோபிளாஸ்டிக் யூட்ரஸ் எனப்படும் மிகை வளர்ச்சியடைந்த கருப்பை, செப்டேட் யூட்ரஸ் எனப்படும் தடுக்கமைந்த கருப்பை, இரட்டைக் கருப்பை, ஒற்றைக்கூம்பு கருப்பை, மைகார்னுயேட் யூட்ரஸ் எனப்படும் கவர்க்கூம்புக் கருப்பை போன்ற பிறவிக்குறைகளால் கருப்பை பாதிக்கப்பட்டிருக்கும்போது அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டியிருக்கும்.

கருப்பை தசை ஒட்டிக்கொள்ளுதல்.......

கருப்பையின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று அழுத்தி ஒட்டிக் கொண்டிருந்தால் அதை தனித்தனியே பிரிப்பதற்கு ஹிஸ்டராகோப்பி மற்றும் சில சிறப்பு கருவிகளை பிறப்புறுப்பு வழியாக செலுத்தி அறுவை சிகிச்சை செய்யலாம். ஒரேநாளில் முற்றுபெறக்கூடிய இந்த அறுவை சிகிச்சையின்போது தசைகளை பிரித்து வைப்பதற்காக தேவைப்பட்டால் பிளாஸ்டிக் காயில் ஒன்று பொருத்தி வைக்கப்படுகிறது. ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் அளிக்கப்படுகின்றன. சில வேளைகளில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளும் அளிக்கப்படுகின்றன. இந்த பிரச்சினை முற்றிலும் சரிசெய்யப்பட்ட பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

நீர்கழலைகள்.......

பாலிப்ஸ் என்கிற நீர்க்கழலைகள் கருப்பையில் அதிகளவில் ஏற்படுகின்றன. இவற்றை கருப்பை திசுச்சுரண்டல் முறையான டி அண்ட் சி முறையில் சுத்தப்படுத்துகிறார்கள். இக்கழலைகளால் மலட்டுத்தன்மை ஏற்பட்டிருந்தால் முற்றிலும் நீக்கப்படுகிறது.

அடினோமையோசிஸ்..........

கருப்பை சுவரின் தசைகள் அளவுக்கு அதிகமாக வளர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த நிலையை சீரமைப்பது சற்று கடினமானது என்றாலும் கருப்பை உள்வரிச்சவ்வுப்படல அழற்சிக்கு சிகிச்சை அளிப்பதுபோல இதற்கும் சிகிச்சை அளித்து சரிப்படுத்தலாம்.

கருப்பை கழுத்து சுரப்பிய பிரச்சினைகள்.........

கருப்பைக் கழுத்துப் பகுதியில் சுரக்கும் சுரப்பிகளாலும் மலட்டுத்தன்மை உண்டாகிறது. இந்த சுரப்பியின் வழியாகத்தான் உயிரணுக்கள் கருப்பையினுள் நுழைகிறது என்பது உங்களுக்கு தெரியும். சில சமயம் இந்த சுரப்பி மிக கட்டியான சளியை போன்று மாறிவிடும் நிலையில் அதனுள் விந்தணுக்களால் நுழைய முடியாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum