கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள்
Page 1 of 1
கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள்
- எண்டோமெட்ரியம் பாதித்து கருப்பையில் காச நோய் தோன்றலாம்.
- தாய் வயிற்றுக்குள் இருக்கும்போதே பெண் சிசுவுக்கு கருப்பை உருவாகி விடும். முதலில் அது மாட்டுக்கொம்பு போல் இரண்டு டியூப் ஆக உருவாகி, வளர்ந்து இணையும். அதன் உள்ளே பள்ளமான பகுதியும் தோன்றும். ஒரு பக்கம் மட்டும் மாட்டுக்கொம்புபோல் வளர்ந்திருந்தாலோ, போதுமான வளர்ச்சியின்றி இருந்தாலோ, அளவில் சுருங்கி பிறவியிலேயே குறைபாட்டுடன் இருந்தாலோ அது பாதிப்பிற்குரிய அம்சமாகும். இத்தகைய பாதிப்பு கொண்ட பெண்களுக்கு திருமணமாகி, குறைவற்ற முறையில் உடலுறவு நிகழ்ந்தாலும் தாய்மையடைய முடியாத சூழல் ஏற்படும்.
- கருப்பையின் வாய் எப்போதும் மூடியிருக்க வேண்டும். உயிரணு அதன் உள்ளே செல்லவும்.திரவம் வெளியே வரவும் மட்டும் வழியிருக்க வேண்டும். அதற்கு மாறாக கருப்பை வாய் திறந்திருந்தால் கரு உள்ளே தங்காமல், கலைந்து வெளியேறி விடும்.
- கருப்பையில் பைப்ராய்ட் போன்ற கட்டிகள் உருவானாலும் கருப்பை பாதிக்கப்பட்டு, தாய்மை தள்ளிப்போகும்.
- கருப்பை புற்றுநோய் தோன்றலாம்.
- கருப்பை வாயில் `பாலிப்' எனப்படும் கட்டிகள் தோன்றலாம்.
பெண்களுக்கு தாய்மை தள்ளிப்போகும்போது கருப்பையில் பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான நவீன சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
பின் குறிப்பு:
மாதவிலக்கு காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தி எந்த பொருளையும் தொடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கும் நிலை இப்போதும் சில இடங்களில் இருக்கிறது. மனிதன் முதலில் காட்டுக்குள் தான் வாழ்ந்தான். அப்போது மனிதனைச் சுற்றி காட்டுமிருகங்கள் நிறைய இருந்தன. சிங்கம், புலி போன்றவைகள் மனிதனின் ரத்தவாடையை 2 கி.மீ. தூரத்தில் இருந்து கூட கண்டுபிடித்து, அங்கு மனிதன் இருப்பதை உணர்ந்து, தேடி வந்து தாக்கி விடும். அதனால் மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பான குகை மற்றும் உயரமான மரங்களில் வைத்தார்கள். இப்போது பாதுகாப்பான உலகில் பெண்கள் வாழ்வதால், மாதவிலக்கு காலத்தில் அவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்புகள்
» ஹூக்காவினால் ஏற்படும் பாதிப்புகள்.
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
» தாம்பத்ய உறவில் ஏற்படும் பாதிப்புகள்
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
» ஹூக்காவினால் ஏற்படும் பாதிப்புகள்.
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
» தாம்பத்ய உறவில் ஏற்படும் பாதிப்புகள்
» உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum