தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாரடைப்பைத்தடுக்கும் புது அரு மருந்து!

Go down

மாரடைப்பைத்தடுக்கும் புது அரு மருந்து! Empty மாரடைப்பைத்தடுக்கும் புது அரு மருந்து!

Post  ishwarya Tue May 07, 2013 12:43 pm

மனிதர்கள் நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது, அவர்களது இதயத்திற்குப் போகும் இரத்தக் குழாய்கள் மிகவும் விரிவடைந்து, ரத்தக் குழாயில் தாராளமாய் ரத்தம் ஓடிடவும், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், அந்தச் சிரிப்பு (நமக்கு) மனிதர்களுக்குப் பெரிதும் உதவிடு கிறது என்கிறார்கள் இத்தாலி நாட்டின் பிஸா (Pisa) பகுதியில் உள்ள Institute of Chemical Philsiology என்ற அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மூலம் – மாரடைப்பு வராமல் தடுக்க ஒரு புதிய மருந்தாகி இந்த வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீசில் உள்ள European Society of cardialogists என்ற அமைப்பு மாநாட்டில் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தனர்.

இதயநோயாளிகளில் 78.5 விழுக் காடு உள்ளவர்கள் இதய நோயி லிருந்து விடுபட்டிருப்பதற்குக் காரணம், கோபப்படாமல் அவர்கள் வாழுவது தான்!

இன்னொரு கல்வியகத்தில் கோபம் வந்தவர்களை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களில் 57.4 சதவிகிதம்தான் வாழுகிறார்கள். இதயநோய் தாக்கும் நிலை அவர்கள் பலருக்கு உண்டு!

அமெரிக்க பால்டிமோர் மருத்துவமனை ஆய்விலும் இத்தாலிய ஆய்வினையே செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். இரத்தக் குழாய் மட்டுமா விரிவடைகிறது – நம் மனங்களும்கூடத்தான்!

மருந்துகள் தரும் சிகிச்சைகளை விட, மன மகிழ்ச்சி, இறுக்கத்தினை எட்டி நில் என்று சொல்வதுபோல் எப்போதும் கல கலப்பான சிரிப்பு மன்னர்களாக வாழுப வர்கள் ஆயுள் குறிப்பாக இதயநோய் வந்தபிறகும்கூட அவர்கள் ஆயுள் நீளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார் டில்லி எஸ்கார்ட்ஸ் மருத்துவ மனையின் பிரபல இதய சிகிச்சை டாக்டர் அசோக் சேத் அவர்கள்!

அவர் முக்கிய அறிவுரை கூறுகிறார் – இதயநோயாளிகள் மட்டுமல்ல; பொது வான மனிதர்கள் எவரும் கோபம் கொள்ளுவதால் மாரடைப்பு விரைவுடன் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று எச்சரிக்கையாகக் கூறுகிறார்.

நமது சுரப்பிகள் (Adrenaline and Rasconstrictor) ஹார்மோன்கள், ரத்தக் குழாய்களைச் சுருக்கி, இரத்த ஓட்டத் திற்குத்தான் தடை ஏற்படுத்தி மாரடைப்பு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றனவாம்!

228 நோயாளிகளில் 200 பேர்கள் ஆண்கள். இதில் 51 பேர்கள் இதய நோய் – மாரடைப்புக்கு ஆளானவர்கள் 28 மரணங்கள் 23 மாரடைப்பு நோயாளிகள் மாறிய நிலை!

வள்ளுவர் சொன்ன சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி எவ்வளவு அறிவி யல் பூர்வக் கருத்து என்பதை எண் ணுங்கள்.

மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும் – குறள் (303)

இதன் பொருள்: ஒருவன், யாரொரு வரிடத்திலும் சினங்கொள்ளாமல் அந்தச் சினத்தை அறவே மறந்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்தச் சினத்தால் தீமையான விளைவுகள் தாம் அவனுக்கு ஏற்படும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற – குறள் (304)

ஒருவனது முகத்தில் வெளிப்படும் சிரிப்பையும் அகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியையும் அடியோடு அழிக் கின்றன. சினத்தைவிட, அவனுக்குப் பகையாக விளங்கும் பொருள் வேறு ஏதொன்றும் இருக்க முடியாது.

வள்ளுவர் சிந்தனை எப்படிப்பட்ட அறவியல் சிந்தனையாக உள்ளது என்பது எல்லையற்ற மகிழ்ச்சிக்குரியது அல்லவா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நான் பூச நட்சத்திரம், கடக ராசியில் பிறந்தேன். எனக்கு மனைவி, 2 மகள்கள். சொந்த தொழில் செய்து வருமானம் வந்தாலும், அல்லல்பட்டு 7 மாதத்திற்கு முன்புதான் புது வீடு கட்டியுள்ளேன். புது வீட்டிற்கு வந்ததிலிருந்து மனக்கவலை அதிகமாகி, கடன் தொல்லையும், உடல் நலக்குறைவ
» இயற்கையே மருந்து உணவே மருந்து
» புது பெண்ணுக்கான அறிவுரைகள்
» புது மொழி 500
» புது மொழிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum