விபூதி பூசுங்கள்
Page 1 of 1
விபூதி பூசுங்கள்
விபூதியை 3 விரல்களால் நெற்றியில் பூசுகிறோம். இதற்கு சிவ ஆகமங்கள் உள்ளன. அசுர, உகர, மகரங்கள் சேர்ந்த 3 மந்திரங்களையும் முறையே அநாமிகை, மத்யமை, தர்ஜன் ஆகியவற்றில் தியானித்துத் தரித்தல் எனக் கூறும் அதிதேவதை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஆவர்.
விபூதி இடும் போது கல்வி அறிவால் உயர்ந்தோர், ஏழங்குல அளவிற்கும், ஆளும் தகுதி படைத்தோர் ஆறங்குல அளவும், வியாபாரிகளும், மற்றவர்களும் மூன்று அங்குல அளவும், பெண்கள் ஒரே அங்குல அளவும் இட்டுக்கொள்ள வேண்டும்.
திருமண் இட்டுக் கொள்ளும் போது பெருவிரலால் தரிக்கின் வலிவைத் தரும். சுட்டு விரல் சொர்க்கத்தை கூட்டும். நகத்தால் தரிக்கக் கூடாது. திருமண்ணை இட்டுக் கொள்ளும் போது, தீச்சுவாலைப் போலவும், மூங்கில் இலை போலவும், தாமரையின் அரும்பு போலவும், இதழ் போலவும் மீனைப் போலவும் தரிசித்தல் நன்று.
விபூதியைக் குழைத்து நமது உடலில் எந்தெந்த இடங்களில் பூசிக் கொள்ள வேண்டும் தெரியுமா?
மொத்தம் 16 இடங்களில் பூசிக் கொள்ள வேண்டும் என ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவை, தலை, நெற்றி, மார்பு, தொப்புள், முழந்தாள் இரண்டு, தோள் இரண்டு, முழங்கை இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு மற்றும் கழுத்து ஆகியவை ஆகும். c
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» விபூதி பூசுங்கள்
» விபூதி விநாயகர்
» இலை விபூதி சிறப்பு
» நோய்கள் தீர்க்கும் இலை விபூதி
» பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?
» விபூதி விநாயகர்
» இலை விபூதி சிறப்பு
» நோய்கள் தீர்க்கும் இலை விபூதி
» பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum