தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறார் வீரேந்திர ஷேவாக்- இந்தியா எழுச்சி பெறுமா?

Go down

3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறார் வீரேந்திர ஷேவாக்- இந்தியா எழுச்சி பெறுமா? Empty 3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறார் வீரேந்திர ஷேவாக்- இந்தியா எழுச்சி பெறுமா?

Post  ishwarya Mon May 06, 2013 2:19 pm



இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவைத் தவிக்க விட்டு விட்ட வீரேந்திர ஷேவாக், பிரிமிங்காம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சற்றே பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் சச்சின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், யார் யார் விளையாடினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பார்த்து விட்டது. இந்த இடத்தில் ஷேவாக் இருந்திருந்தால் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும் என்பதுதான் அத்தனை ரசிகர்களின் மனப்பான்மையுமாக இருந்தது. காரணம், வீரேந்திர ஷேவாக்கின் அதிரடி ஆட்டம்.

வருகிற பந்து எப்படி வருகிறது, எந்த வேகத்தில் வருகிறது என்பது குறித்து சற்றும் பயப்படாமல் பந்தை எந்த திசைக்கு விரட்டுவது, என்பதில் மட்டுமே கவனமாக இருப்பார் ஷேவாக். சற்றும் பயப்படாமல் ஆடும் அவரது ஸ்டைல்தான் இந்திய அணிக்குப் பலமாக இருந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக காயம் ஏற்பட்டு விட்டதால், அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாமல் போய் விட்டது. இதனால் இந்தியா 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலையை நெருங்கியுள்ளது.

இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன. அந்த இரண்டையும் வென்றால் கூட இந்தியாவால் தொடரை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அதேசமயம், இன்னும் ஒரே ஒரு போட்டியில் வென்று தொடரை வென்று விட்டால், இங்கிலாந்து அணி டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்து விடும்.

இந்த இக்கட்டான நிலையில் வீரேந்திர ஷேவாக் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட ஆயத்தமாகியுள்ளார். காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்திருப்பதால் தான் அடுத்த 2 போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக ஷேவாக் தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட் போட்டி பிரிமிங்காமில் 10ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக வருகிற வெள்ளிக்கிழமை இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடவுள்ளது.

இந்த பயிற்சி ஆட்டத்தில் ஷேவாக்கையும், கம்பீரையும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்க டோணி திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் இருவரும் 3வது டெஸ்ட் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது. கம்பீரும் காயமடைந்து தற்போது சரியாகி விட்டார். இதனால் 3வது டெஸ்ட்டுக்கு அவரும் ஆயத்தமாகியுள்ளார்.

இருவரும் இணைந்து விளையாடும்போது மிகவும் சிறப்பாக, ஒருமித்து ஆடுவார்கள் என்பதால் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவதை ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஷேவாக்கின் வருகையால் இந்திய அணியும் பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. அவரது அதிரடி ஆட்டத்தால் அணியின் பிற வீரர்களுக்கும் பெரும் ஊக்கம் கிடைக்கும் என்பதால் ஷேவாக் வருகையை இந்திய அணி நிர்வாகம் உற்சாகத்துடன் வரவேற்கும்.

என்னதான் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் 50 ஓட்டங்களை எடுத்தாலும் நமது கேப்டன் தோணி மட்டும் 10 ஓட்டங்களை கூட தாண்ட மிகவும் சிரமப்படுகிறார்.

ஹர்பஜன் அடுத்த போட்டியில் இருப்பது நல்லதல்ல என்று நினைக்கிறேன். அவரை விட திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இப்போது இந்திய அணியில் இருக்கிறார்கள். அமித் மிஸ்ரா அடுத்த போட்டியில் இடம் பெறுவார் என்று நினைக்கிறேன்.

இந்த 11 பேர் விளையாடினால் இந்தியாவிற்கு வெற்றி நிச்சயம்.....
Virender sehwag
Guvtham Gambir
Rahul Dravid
Sachin Tendulkar
VVS Laxman
Yuvraj Sing
Mahendra Sing Dhoni
Amit Mishra
Praveen Kumar
Zaheer Khan
Ishant Sharma



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடவுளால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்: வீரேந்திர ஷேவாக்
» கடவுளால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்: வீரேந்திர ஷேவாக்
» 150 வது டெஸ்ட்டில் ஜேக் கேலிஸ் அதிரடி: 159 ஓட்டங்கள் குவிப்பு
» எம் டி.வி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
» செப்டம்பரில் ராணா படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum