தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விலைவாசி உயரத்தான் செய்யும்.. அதுக்கு இப்படி புலம்புறதா? சிவகங்கை சின்னபையன் - Chidhambaram Slams Common Man

Go down

விலைவாசி உயரத்தான் செய்யும்.. அதுக்கு இப்படி புலம்புறதா? சிவகங்கை சின்னபையன் - Chidhambaram Slams Common Man Empty விலைவாசி உயரத்தான் செய்யும்.. அதுக்கு இப்படி புலம்புறதா? சிவகங்கை சின்னபையன் - Chidhambaram Slams Common Man

Post  ishwarya Mon May 06, 2013 12:04 pm

செய்தி:
"பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

வாசகர்கள் கருத்து:

சிவகங்கை சின்னபையன் என்று கருணாநிதி சிதம்பரத்தை பார்த்து அந்நாளில் சொல்வார். அது சரியாக போய் விட்டது. சின்ன பையன் போலதான் பேச்சு உள்ளது. குடி தண்ணீர் நன்றாக இருந்தால் நடுத்தர மக்கள் ஏன் பதினைந்து ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் வாங்க போகிறார்கள். நீங்க கொடுக்கும் தண்ணீரை குடித்தால் டாக்டருக்கு 150 ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. அதனால் தான் நீரை காசு கொடுத்து வாங்குகிறார்கள். அதுவும் எல்லா மத்தியதர மக்களும் வாங்குவதில்லை. அவரிகளிடம் எங்கே வசதி உள்ளது. ஆகவே நீரை காய்ச்சி பாட்டிலில் போட்டு குழந்தைகளுக்க்கு கொடுக்கிறார்கள். இதை போய் கிண்டல் செய்கிறாரே சிதம்பரம் இவர் உண்மையிலேயே சின்ன பையன் தான். ஒரு ரூபாய் அரிசி விலை ஏற்றினால் அந்த தொகை ஒரு ரூபாய் உற்பத்தியாளருக்கு போய் சேருகிறது என்று எந்த மடையன் சொன்னான்? விவசாயியை போய் கேளுங்கள்? அவர்கள் சொல்லுவார்கள். கொள் முதல் விலை கிடைக்கவில்லை என்று அழுகிறார்கள் அவர்கள். அந்த கணக்கும் சரியில்லை சின்னபையனே? நடுத்தர மக்களை விரோதித்து கொண்டு எந்த அரசியல்வாதியும் வெற்றி பெற்றதில்லை சின்னபையனே? பிரதமரை அமெரிக்க டைம் பத்திரிகை கிழி கிழி என்று குற்றம் சாட்டி யுள்ளார்கள் அதை கண்டிக்கவேண்டும், மேலும் மன்மோகன் சிங்கை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் அதற்குபல வழிகள் உள்ளன. அதை விட்டு நடுத்தர மக்களிடம் விளையாடாதீர்கள்? . மேலும் உங்களிடம் நிதி அமைச்சகம் வேறு கொடுக்க போகிறார் பிரதமர். நீங்கள் அவரை காக்கா பிடிப்பதற்கு பரிசாக. அடுத்த தேர்தலில் நடுத்தர மக்களிடம் வோட்டு பிச்சைக்கு நீங்கள் வந்தாக வேண்டும் ஜாக்கிரதை கடந்த தேர்தலில் கருணாநிதி துணையுடன் fraud தில்லு முல்லு பண்ணியதைப்போல இப்போது செய்ய முடியாது .


அறுபது வருடமாக அடிப்படை தேவையான சுத்தமான குடிநீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் எதுவுமே தன்னிறைவு அடையாதததை நினைக்க துப்பில்லை....ஊழலை கட்டுபடுத்த வக்கில்லை......அரசாங்கத்தை செம்மையாக,ஊழலற்ற,வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க எண்ணம் இல்லை......ஆனால் விலை ஏற்றத்திற்கு மட்டும் ஒப்பீடு செய்வது குறையவில்லை......விவசாயிகள் பயன் பெரும் வகையில் கொள்முதல் விலை ஏற்றுவதை யாரும் குறை கூற வில்லை.....ஆனால் அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களை பாதுகாக்க துப்பில்லாமால் ஆண்டுதோறும் பல மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் வீணாவதை தடுக்க இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை தான் என்ன ????இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தை கடுமையாக குறை கூறி குட்டியதை வசதியாக மறந்து விட்டதன் மர்மம் என்ன????? வாயிக்கு வந்தது வார்த்தை என்று எதை வேண்டமானாலும் பேசுவது....பின் எதிர்ப்பு கிளம்பியதுவுடன் மன்னிப்பு கோர வேண்டியது.......சமீப காலமாக மத்திய அரசில் பங்கு பெரும் தமிழகத்தை சார்ந்த அமைச்சர்கள் தமிழகத்திற்காக எதுவும் செய்யாமல் இருப்பதோடு அல்லாமல் ஊழல் குற்றசாட்டிற்கு ஆளாகி தமிழகத்தின் கெளரவம் ,மற்றும் கண்ணியத்தை காற்றில் பறக்க விட்டார்கள்......அதில்இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது..... இவர் பேசும் தகுதியை இழந்துவிட்டார்......இப்படி பட்டவர் விலை ஏற்றதை பற்றி கூறுவது மகா கேவலமானது.....

செட்டிநாட்டு அரசருக்கு சாதாரண மக்களின் கஷ்டம் எங்கே புரிய போகிறது.மக்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவல படுத்தி உள்ளார் இந்த சிதம்பரம்.உங்கள் ஆட்சி இருக்கும் வரை என்ன பேச முடியுமோ பேசவும் . வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு அதற்கான பதில் கிடைக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum