தாய்ப்பால் அவசியம்!
Page 1 of 1
தாய்ப்பால் அவசியம்!
இன்றைய பெண்களில் பலர் வேலைக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும்கூட அவர்களில் பலர் வேலைக்கு செல்கிறார்கள். அவ்வாறு வேலைக்கு செல்லும்போது குழந்தையை இன்னொருவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
வேலைக்கு சென்று 8-10 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், குழந்தைக்கு அவசரம் அவசரமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள். இதற்கிடையில், தொடர்ந்து 8-10 மணி நேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால், அவர்களது மார்பில் பால் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதனால் மார்பில் வலி எடுத்து அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும், தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற சிக்கலில் உள்ள வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை மிகவும் சுத்தமான பாத்திரத்தில் பிழிந்தெடுத்து சேகரித்து, அதை இறுக்கமாக முடி விடுங்கள்.
பின்னர் அதை, பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் தாய்ப்பாலை 6-8 மணி நேரம் வரையே வைத்து பாதுகாப்பதுதான் உகந்தது. பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தினுள் தாய்ப்பால் கொண்ட பாத்திரத்தை வைக்கலாம்.
வீட்டில் குழந்தையை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்த தாய்ப்பாலை சுத்தமான கரண்டி முலம் குழந்தைக்கு பசி எடுக்கும்போது ஊட்டிவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாய்ப்பால் ஊட்டும் பெண்ணுக்கும் சத்துணவு அவசியம்
» கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கூடுதல் கவனிப்பு அவசியம்
» தாய்ப்பால் அதிகரிக்க
» தாய்ப்பால் சுரக்க
» தாய்ப்பால் சுரக்க
» கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கூடுதல் கவனிப்பு அவசியம்
» தாய்ப்பால் அதிகரிக்க
» தாய்ப்பால் சுரக்க
» தாய்ப்பால் சுரக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum