தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்ப்பால் ஊட்டும் பெண்ணுக்கும் சத்துணவு அவசியம்

Go down

தாய்ப்பால் ஊட்டும் பெண்ணுக்கும் சத்துணவு அவசியம் Empty தாய்ப்பால் ஊட்டும் பெண்ணுக்கும் சத்துணவு அவசியம்

Post  ishwarya Mon Feb 11, 2013 2:30 pm

Mother Feeding
கர்ப்பகாலத்தில் கரு குழந்தைக்கு ஏற்ப தேவையான சத்தான உணவுகளை பெண்கள் உட்கொள்கின்றனர். அதேபோல குழந்தை பிறந்த பின் தாய்பால் கொடுக்கும் பெண்களுக்கு, அதிக அளவு பால் சுரக்கவும், உடல் நலனைக் காக்கவும் கூடுதல் உணவு தேவை.

இரும்புச் சத்துணவு அவசியம்

பிரசவ நேரத்தில் அதிக அளவு ரத்தப்போக்கினால் பெண்களின் உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கும்.

தாய்மார்களுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறையினால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் எடை குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது. எனவே பிரசவித்த பெண்களுக்கு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இரும்புசத்து நிறைந்த உணவை அளிக்கவேண்டும். ஏனெனில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை செயல்பாடு மற்றும் உடல் எதிர்ப்பு சக்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அதிகமான உணவு உட்கொள்ளவும். முழு தானியங்கள், முளைக்கட்டிய தானியங்கள், ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். பால், மாமிசம், முட்டை உட்கொள்ளவும். அதிக அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும்.பயறுகள், உலர் பழங்கள் மற்றும் பச்சைக் கீரைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. மாமிசக் கறி, மீன், கோழிக் கறி போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது.தாவரங்களில் குறைவான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறது. ஆனால் மாமிச உணவுகளில் அதிகமாக உள்ளது. வைட்டமின் 'சி" அதிகமுள்ள பெருநெல்லி, கொய்யா, ஆரஞ்சு வகை பழங்கள் ஆகியன, தாவரங்களில் உள்ள இரும்புச்சத்தை கிடைக்கச் செய்கின்றன.

வெள்ளைப்பூண்டு

பிரசவித்த பெண்களுக்கு நல்லெண்ணை, வெள்ளைப் பூண்டு, வெல்லம் வாங்கித் தருவது தமிழர் மரபாகும். இது இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. நல்லெண்ணையானது தளர்வடைந்த உடலை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற உதவுகிறது. பச்சை உடம்பு என்று அழைக்கப்படும் பிரசவித்த தாய்மார்களின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட புண்களை ஆற்றும் சக்தி எள் எண்ணெக்கு அதிகம் உண்டு. எனவேதான் நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொடுக்கின்றனர். மிதமான காரம் சேர்த்த, மிளகு, கொடாம்புளி சேர்த்த உணவுகளையே கொடுக்கலாம். அது தாய், சேய் நலனுக்கு ஏற்றது.

அதேபோல் வெள்ளைப் பூண்டை வதக்கி உட்கொள்வது தேவையற்ற வாயு உடலில் சேராமல் தடுக்கும், தாய்பால் சுரக்கும். வெல்லமானது தாய்மார்களின் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். இதனால் தாய்பால் மூலம் குழந்தைகளுக்குச் வயிற்றுக்குச் செல்லும் சத்தானது குழந்தைகளின் நலனை பாதுகாக்கும்.

புரதச்சத்து அவசியம்

புரதச்சத்து நிறைந்த கடல் உணவுகள், மாமிச உணவுகள், பால் பொருட்கள், பீன்ஸ் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் தாய்மார்களின் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். தாய்பால் தரும் பெண்கள் அவசியம் கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்கள், தயிர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாகும்.

தண்ணீர் அவசியம்

நன்றாக காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அருந்துவது அவசியம். அதோடு பழரசங்கள், பால், மூலிகை தேநீர் ஆகியவற்றை அருந்துவது உடல் நலத்திற்கு ஏற்றது. இது உடலில் நீர் சக்தியை தக்கவைக்கும்.

மூடப்பழக்கம் தேவையில்லை

பிறந்த குழந்தைக்கும், பிரசவித்த தாய்க்கும் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம். இதுவே சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே உடல் நலத்திற்கு ஒத்துவராத மூடபழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டும் மருந்துகள் உட்கொள்ளவும். 14-16 வார கர்ப்பத்தில், இரும்பு, போலியேட் மற்றும் கால்சியம் நிறைந்த உணவை சேர்த்து பால் கொடுக்கும் பொழுதும் தொடரவும்.போலிக் அமிலம் பிறக்கும் குழந்தையின் எடையை அதிகரிப்பதோடு, பிறப்பு குறைகளையும் குறைக்கிறது. பச்சைக் காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், ஈரல் ஆகியவற்றில் அதிக அளவு போலிக் அமிலம் உள்ளது. எனவே மறக்காமல் அவற்றை வாங்கி உட்கொள்ளலாம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

தவிர்க்க வேண்டியவை

காபி, தேநீர், சோடா பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இவற்றை பருகுவதன் மூலம் இரும்புச்சத்தை கிரகித்து கொண்டு அவற்றை கிடைக்காமல் செய்கின்றது.எனவே சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிடும் பொழுதோ, சாப்பிட்டவுடனோ தேநீர் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum