தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க வழிகள்

Go down

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க வழிகள் Empty பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க வழிகள்

Post  meenu Tue Jan 22, 2013 6:10 pm


கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக இருக்க நிறைய உணவுகளை உண்பார்கள். ஆனால் பிரசவத்திற்குப் பின்னர் , சில நாட்கள் கழித்து அவற்றால் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. ஏனெனில் குழந்தை பிறந்த பின்னர், உடலில் கர்ப்பத்தின் போது சாப்பிட்ட உணவுகள் அனைத்தும் அதன் வேலைகளை காண்பிக்கும்.

அதனால் உடல் எடை அதிகரித்து, உடலின் அழகான வடிவம் இல்லாமல் போய்விடும். மேலும் இத்தகைய பிரச்சனை வராமல், உடல் எடையை அழகாக வைக்க ஒரு சில எளிய டிப்ஸ் இருக்கிறது. பிரசவம் ஆன 3 மாதத்திற்குப் பின், ஈஸியாக ஒரு சிலவற்றை செய்தால் 6 முதல் 8 மாதத்திற்குள் அழகாக மாறிவிட முடியும்.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது என்னென்ன குறிப்புகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

* பிட்னஸ் சென்டர் போகும் முன் மறக்காமல் மருத்துவரின் ஆலோசனை பெற்று, மருத்துவ சோதனை செய்த பின்னர் தான் போக வேண்டும்.

* தினமும் 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

* நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களான பாப் கார்ன், கோதுமையால் ஆன நொறுக்கு தீனிகள், உலர்ந்த திராட்சைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை மட்டும் சாப்பிட வேண்டும்.

* இறைச்சி சாப்பிடும் போது எலும்பில்லாத சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடலாம். ஆனால் அதுவும் வாரம் ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும்.

* வெள்ளை உணவுப் பொருட்களான வெள்ளை சாதம், வெள்ளை பிரட் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்து, நவ தானியங்களால் ஆன பிரட், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

* ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

* உடல் நிலை ஓரளவு சரியானது போல் இருந்தால், லேசான உடற்பயிற்சியை செய்ய தொடங்கலாம்.

* எளிதாக உடல் எடையை குறைக்க சிறந்த வழி வீட்டு மாடிப்படியை ஏறுவது தான். நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவ்வப்போது மாடிப்படியை ஏறி இறங்குங்கள்.

* தாய்ப்பால் குழந்தைக்கு கொடுப்பதால், உடலில் இருந்து ஒரு நாளைக்கு 500 கலோரிகள் கரைகின்றன. ஆகவே எவ்வளவு தாய்ப்பால் குழந்தைக்கு கொடுக்கின்றோமோ, அவ்வளவு கலோரிகள் உடலில் இருந்து கரையும்.

- ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு நடந்தால், ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையையும் விரைவாக குறைந்து, சிக்கென்று அழகாக மாறலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum