'உ' பட தலைப்பை அபகரிக்க மோசடி: இயக்குனர் ஆஷிக் புகார்
Page 1 of 1
'உ' பட தலைப்பை அபகரிக்க மோசடி: இயக்குனர் ஆஷிக் புகார்
lekhafoods.gif
'உ'பெயரில் இரண்டு பட விளம்பரங்கள் வந்துள்ளன. 'உ' பெயரில் படம் எடுத்து முடித்துள்ள இயக்குனர் “ஆஷிக்” தலைப்பு தங்களுக்கே சொந்தம் என்று கூறினார். இது குறித்து ஆஷிக் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
தம்பி ராமையா முதன்மை பாத்திரத்தில் நடிக்க 'உ' படத்தை இயக்கியுள்ளேன். ஆஜித், வருண், நாயகியாக நேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தம்பிராமையா நான்கு இளைஞர்களை வைத்து தன் லட்சியத்தை அடைய எத்தகு முயற்சிகள் எடுக்கின்றார் என்பதே கதை.
'உ' தலைப்பை 2012 ஜூன் 30-ந்தேதி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்தோம். வேறு யாரும் அந்த தலைப்பை பதிவு செய்ய வில்லை என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது திடீரென்று இன்னொரு நிறுவனம் 'உ' பெயரில் படம் எடுப்பதாக விளம்பரங்கள் வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
'உ' தலைப்பை அபகரிக்க திட்டமிட்டு மோசடி நடந்துள்ளது. எங்கள் தலைப்பை முறைகேடாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் கில்டில் புகார் செய்துள்ளோம். 'உ' தலைப்பு எங்களுக்கே சொந்தம் அதையாருக்கும் விட்டுத்தர மாட்டோம். 'உ' படம் விரைவில் வெளியிடப்படும் இப்படத்துக்கு ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிஜித் இசையமைத்துள்ளார். முருகன் மந்திரம் பாடல்கள் எழுதியியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜித் வேண்டுகோளை ஏற்று தலைப்பை மாற்றினார் தமிழ்படம் இயக்குனர்!
» 'ஆதிபகவன்' படத்தில் இந்துக்கள் பற்றி அவதூறு: தலைப்பை மாற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்
» ரூ.67லட்சம் மோசடி புகார் : இரு டைரக்டர்கள் கைது!
» இலியானா மீது ரூ.40லட்சம் மோசடி புகார்…!
» செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum