தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு விருது

Go down

அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு விருது Empty அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கமலஹாசனுக்கு விருது

Post  ishwarya Sat May 04, 2013 5:36 pm


அமெரிக்காவில் உள்ள லாஸ்வெகாஸ் நகரில் இன்று மாலை நடைபெறும் திரைப்பட விழாவில் ‘எல்லைகளைக் கடந்த இந்திய சினிமா’ என்ற தலைப்பில் நடிகர் கமலஹாசன் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம் என்னும் அமெரிக்காவின் ஒளிபரப்பாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் லாஸ்வெகாஸ் நகரில் மின்னணு ஊடகவியலாளர்களான விழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வருகிற 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான உலகின் மிகப்பெரிய கண்காட்சியும், கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

மின்னணு ஊடகத்துறை சார்பாக ஒளிபரப்பப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள், சம்பவங்கள் மற்றும் இவற்றின் மேம்பாடு குறித்து இங்கு நடைபெறும் கருத்தரங்கில் விவாதம் நடைபெறுகிறது. நடைமுறையில் உள்ள ஒளிபரப்பு முறைகளை கடந்து, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் புதிய வகையிலான ஒளிபரப்பு யுக்திகளை கையாளுவது தொடர்பாகவும் இந்த கருத்தரங்கில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த விழாவில் உலகில் உள்ள 151 நாடுகளில் இருந்து ஆயிரத்து 600 பேர் பங்கேற்பாளர்களாகவும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாகவும் கலந்து கொள்கின்றனர். இன்று மாலை 4.15 மணியளவில் நடைபெறும் கருத்தரங்கில் நடிகர் கமலஹாசன் பங்கேற்று ‘எல்லைகளை கடந்த இந்திய சினிமா’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் இதில் கமலஹாசன் தயாரித்து, நடித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் காட்சியமைப்புகளைப் பற்றி உலகப் புகழ்பெற்ற திரையுலக வல்லுனர்கள் கலந்துரையாடுகின்றனர். இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்காவின் தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கத்துக்கும், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புக்கும் உள்ள ஒருங்கிணைப்பை விளக்கும் வகையில் இந்த கருத்தரங்கில் இந்தியா சார்பில் நடிகர் கமலஹாசன் பங்கேற்கிறார்.

விஷுவல் எபெக்ட்ஸ் சொசைட்டி இயக்குனர் ஜெப் கிளெய்சர், நடிகை பூஜா குமார், விஷூவல் எபெக்ட்ஸ் சூப்பர்வைசர்கள் என்.மதுசூதனன், டிம் மெக்கோவர்ன், இன்டெல் குழுமத்தை சேர்ந்த ரவி வெல்ஹல் உள்ளிட்ட ஊடகத்துறை வல்லுனர்கள் கமலஹாசனுடன் கலந்துரையாடுகின்றனர்.

நியூயார்க்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான விருதுகள் வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் விருதினை இந்திய சினிமா துறையின் சார்பில் நடிகர் கமலஹாசன் பெற்றுக் கொள்கிறார்.

கமல் இயக்கி, நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் சிறந்த அரங்க அமைப்பு, சிறந்த நடன அமைப்பு போன்றவற்றிற்காக 2 தேசிய விருதுகளை வென்றது. இதுதவிர, 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள கமலஹாசன் நடித்த திரைப்படங்கள், சர்வதேச திரைப்பட விருதுக்கான போட்டிகளில் பலமுறை பங்கேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum