திருட்டு சி.டி.யில் சேட்டை படம்: நடிகர் ஆர்யா கமிஷனரிடம் புகார்
Page 1 of 1

நடிகர் ஆர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் சேட்டை. இதில் நடிகைகள் ஹன்சிகா, அஞ்சலி நடித்துள்ளனர். இந்த படத்தின் திருட்டு சி.டி.வெளியாகி உள்ளதாகவும் அதனை தடுக்க வேண்டும் என நடிகர் ஆர்யா, பட தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
சேட்டை படம் கடந்த 5-ந் தேதி வெளியாகி 250 தியேட்டகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் காட்சிகளை திருட்டுத்தனமாக பதிவு செய்து திருட்டு சி.டி.யில் விற்பனை செய்கிறார்கள். பர்மாபஜார், அண்ணாநகர் ரவுண்டானா, பூக்கடை, பூங்காநகர், சிந்தாதிரிப் பேட்டை, மேற்கு மாம்பலம், ரிச்சி தெரு ஆகிய பகுதிகளில் இந்த பட சி.டிக்கள் கிடைக்கின்றன. மேலும் 3 இணைய தளங்களிலும் சேட்டை படத்தை வெளியிட்டுள்ளனர். எனவே திருட்டு சி.டி.விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் நடிகர் ஆர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும் திருட்டு டி.வி.டிக்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இதுபோன்று போலீசாரிடம் புகார் அளிக்கும் போது மட்டுமே புதுப்படங்களில் திருட்டி சி.டி.விற்பனை கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து ஆர்யாவிடம் நடிகை அஞ்சலி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், காமெடி பண்ணாதீர்கள் என்று மட்டும் கூறி வேகமாக சென்றார்.
ஆனால் நிருபர்கள் அவரை அனுகி மீண்டும் அஞ்சலி பற்றி கேட்டனர். அது அஞ்சலியின் தனிப்பட்ட விவகாரம் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி எல்லாம் என்னிடம் பேசிக் கொள்வதில்லை. இந்த பிரச்சினையில் இருந்து அஞ்சலி மீண்டு வருவார் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராவணன் திருட்டு விசிடி… கமிஷனரிடம் சுஹாஸினி புகார்!
» 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» சாந்தனு பாக்யராஜ் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» நடிகை அனுராதாவுக்கு கொலை மிரட்டல்-கமிஷனரிடம் புகார்
» சக நடிகர்கள் செய்த ரூ. 7 கோடி மோசடி-கமிஷனரிடம் வடிவேலு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum