தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரத்துக்கு அண்ணனான சந்தானம்

Go down

பரத்துக்கு அண்ணனான சந்தானம் Empty பரத்துக்கு அண்ணனான சந்தானம்

Post  ishwarya Sat May 04, 2013 5:08 pm

சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘டிஷ்யூம்’, ‘பூ’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சசி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘555’. குறைவான படங்களே இயக்கியிருந்தாலும், தன்னுடைய படங்களுக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்குவதில் வல்லவரான சசி, இந்த படத்திலும் அதே முறையை கையாண்டிருக்கிறார்.

இப்படத்தின் கதநாயாகனாக நடிக்கும் பரத், இப்படத்தில் மூன்று வெவ்வேறு தோற்றத்தில் வருகிறாராம். சாக்லேட் பாய், தாடி, மீசை மற்றும் நீளமான தலைமுடியுடன் ஒரு கதாபாத்திரம், மொட்டைத் தலையுடன் ஒரு கதாபாத்திரம் என மூன்றுவிதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

இப்படத்திற்காக பரத் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டும் வைத்துள்ளார். இதற்காக கடந்த 9 மாதங்களாக அளவான உணவு சாப்பிட்டும், தினம் ஆறு மணி உடற்பயிற்சி செய்தும் உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றினாராம்.

இப்படத்தில் சந்தானமும் நடிக்கிறார். பரத்-ன் அண்ணாக நடிக்கும் சந்தானம் காமெடி மட்டுமல்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் எமோஷனலாக நடித்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம். சந்தானம் நடித்த படங்களில் இப்படம் புதுவிதமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் இன்னும் படமாக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum