தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதிர்ப்பு எதிரொலி: தனுஷ் புகை பிடிக்கும் காட்சி நீக்கம்?

Go down

எதிர்ப்பு எதிரொலி: தனுஷ் புகை பிடிக்கும் காட்சி நீக்கம்? Empty எதிர்ப்பு எதிரொலி: தனுஷ் புகை பிடிக்கும் காட்சி நீக்கம்?

Post  ishwarya Sat May 04, 2013 4:59 pm

தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தில் நாயகியாக பார்வதி நடிக்கிறார். பரத்பாலா இயக்குகிறார். அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தை விளம்பர படுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதில் தனுஷ் புகை பிடிப்பது போல் காட்சிகள் உள்ளன.

இதனை முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி கண்டித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் மரியான் படத்தின் விளம்பரத்தில் தனுஷ் புகை பிடிக்கும் காட்சிகளை முதன்மை படுத்தி வெளியிட்டு உள்ளனர். புகை பிடிக்கும் காட்சிகள் விளம்பரங்களில் இடம் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று ரஜினி காந்த் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தனுஷ் புகை பிடிக்கும் விளம்பர காட்சி அதிர்ச்சி அளிக்கிறது. 'மரியான்' படத்தில் புகை பிடிக்கும் காட்சி இடம் பெறாமல் தனுஷ் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து புகை பிடிக்கும் காட்சிகளை நீக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனருடன் ஆலோசித்து வருகிறார். படம் ரிலீசாகும் போது புகை பிடிக்கும் காட்சி இடம் பெறாது என தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முத்துலட்சுமி எதிர்ப்பு எதிரொலி: வனயுத்தம் படத்தில் விஜயலட்சுமி காட்சிகள் அடியோடு நீக்கம்
» புகை பிடிக்கும் காட்சியில் நடித்த மோகன்லால் மீது கேரள அரசு வழக்கு
» மயக்கம் என்ன படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் விதிமுறை மீறல் – அன்புமணி குற்றச்சாட்டு
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி… இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum