தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி… இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து!

Go down

முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி… இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து! Empty முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி… இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து!

Post  ishwarya Sat Mar 30, 2013 12:16 pm

இன்று நடக்கிவிருந்த துப்பாக்கி பட சக்ஸஸ் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் துப்பாக்கியில் இஸ்லாமியரை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சைதான் என்கிறார்கள்.
தீவிரவாதத்தைப் பற்றி படமெடுத்தாலே ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று கோஷம் எழுப்பி விஜய் வீட்டை முஸ்லிகம்ள் முற்றுகையிட்டனர்.
இந்தப் போராட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட் இன்று சென்னை ரெயின் ட்ரீ ஓட்டலில் நடப்பதாக இருந்தது.
ஆனால் பிரஸ்மீட்டுக்கு வரும் செய்தியாளர்கள் யாராவது இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளிக்கப்போய் சிக்கலில் சிக்கிக் கொள்வோமோ என பயந்து பிரஸ் மீட்டையே ரத்து செய்து விட்டார்களாம். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பிரஸ் மீட் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நபிகளை அவமானப்படுத்தும் விதமாக படமெடுத்த ஹாலிவுட் டைரக்டரை கண்டித்து முஸ்லிம்கள் சென்னையையே ஸ்தம்பிக்க வைத்தது நினைவிருக்கலாம். ஒருவேளை துப்பாக்கி தயாரிப்பாளர்களுக்கு அந்த போராட்டம் நினைவுக்கு வந்துவிட்டதோ என்னமோ..!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்கள் போராட்டம் எதிரொலி – கொழும்பு பயணத்தை ரத்து செய்வாரா அமிதாப்?
» எதிர்ப்பு எதிரொலி: தனுஷ் புகை பிடிக்கும் காட்சி நீக்கம்?
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» முத்துலட்சுமி எதிர்ப்பு எதிரொலி: வனயுத்தம் படத்தில் விஜயலட்சுமி காட்சிகள் அடியோடு நீக்கம்
» மலேசியா போகாத சூர்யா, ரத்த சரித்திரம் சிறப்புக் காட்சி ரத்து… ஈழத் தமிழர் எதிர்ப்பு காரணமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum