தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்ப காலத்தில் தளர்வான ஆடைகள் அணியவும்

Go down

கர்ப்ப காலத்தில் தளர்வான ஆடைகள் அணியவும் Empty கர்ப்ப காலத்தில் தளர்வான ஆடைகள் அணியவும்

Post  meenu Tue Jan 22, 2013 5:52 pm

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலின் உறுப்புகள் பெரிதாகின்றன. குறிப்பாக மார்பு, வயிறு, விலா எலும்புகள் பெரிதாகிறது. இதற்கு முக்கிய காரணம் பிட்யூட்டரி சுரப்பிதான் என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்ப காலத்தில் மார்பகம், வயிறு, கருப்பை மற்றும் விலா எலும்பின் அளவு அதிகரிக்க காரணம் ஹார்மோன்.

ஏனெனில், அது அனைத்து பகுதிகளிலும் சுருக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தளர்வடையச் செய்து இப்பகுதிகளை பெரிதாக்குகிறது. எனவே கர்ப்ப காலத்தில் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகளை அணிந்தால் மார்பக அழுத்தத்தின் காரணமாக மேலும் அழுத்தம் அதிகரிக்கும்.

அதனால் தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களாகிய நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், உதரவிதானம் இறுக்கமடைதல்,விலா அகலப்படுத்துதல் போன்ற காரணங்களால் மார்பு மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. கர்ப்பகாலத்தில் சிறந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நெஞ்சு எரிச்சல் தர கூடிய உணவு வகைகளை தவிர்க்கலாம். அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும். அது சீரான பிரசவத்திற்கு வழி வகுக்கும். பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மார்பு இறுக்கம் இயல்பானதாக கருதப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் அவை கடுமையான பிரச்சனைகனை ஏற்படுத்தக்கூடும்.

அதாவது மார்பு அழுத்தம் அதிகமாக இருந்தால் ஆஸ்துமா, மாரடைப்பு இரத்தம் உறைதல் அல்லது ஏதேனும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum