தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படங்கள் தோற்றதால் இமயமலைக்கு ஓடுகிறேனா?-விஷால் விளக்கம்

Go down

படங்கள் தோற்றதால் இமயமலைக்கு ஓடுகிறேனா?-விஷால் விளக்கம் Empty படங்கள் தோற்றதால் இமயமலைக்கு ஓடுகிறேனா?-விஷால் விளக்கம்

Post  ishwarya Sat May 04, 2013 2:56 pm

நடிகர் விஷால் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. நடிகைகள் பலருடன் இணைந்து பேசப்பட்டார். நடிகர் சங்கத்தை விமர்சித்தும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அத்துடன் படங்கள் தோல்வி அடையும் போதெல்லாம் இமயமலைக்கு ஓடிவிடுகிறார் என்றும் செய்திகள் பரவின.

இதற்கு பதில் அளித்து விஷால் கூறியதாவது:-

என்னைப் பற்றிய சர்ச்சைகளை நான் கவனிப்பது இல்லை. ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் அளித்தேன். அதாவது நான் இமயமலை செல்வது குறித்து செய்தி வந்தன. அதில் படங்கள் நன்றாக போகாததால் இமயமலை போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அத்துடன் ரஜினியை பின் பற்றி அவர் இமயமலைக்கு போவது போல் நானும் செல்கிறேன் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். அது எனக்கு அதிர்ச்சியளித்தது.

ரஜினியிடம் இதுகுறித்து பேசினேன். எந்த வகையிலும் அவரை புண்படுத்தும் எண்ணம் இல்லை என்பதையும் விளக்கினேன்.

என்னுடைய ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதெல்லாம் நான் இமயமலைக்கு சென்று வருகிறேன்.

இவ்வாறு விஷால் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum