தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்களுக்கு அஜீத் வேண்டுகோள்: பிறந்தநாளில் போஸ்டர், கட்-அவுட் வேண்டாம்

Go down

ரசிகர்களுக்கு அஜீத் வேண்டுகோள்: பிறந்தநாளில் போஸ்டர், கட்-அவுட் வேண்டாம் Empty ரசிகர்களுக்கு அஜீத் வேண்டுகோள்: பிறந்தநாளில் போஸ்டர், கட்-அவுட் வேண்டாம்

Post  ishwarya Sat May 04, 2013 2:56 pm


நடிகர் அஜீத் பிறந்த நாள் மே 1-ந்தேதி வருகிறது. ரசிகர்கள் அவரது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட ஏற்பாடு செய்து வந்தனர்.

போஸ்டர்கள் அச்சிட்டு நகரமெங்கும் ஒட்டுவதற்கும் முக்கிய பகுதிகளில் கட்-அவுட்கள் வைக்கவும் ஆயத்த மாயினர்.

இந்த தகவல் அஜீத்துக்கு தெரிய வந்ததும் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கமாக தனது பிறந்த நாளை அஜீத் கொண்டாடுவது இல்லை. ரசிகர்களிடமும் தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். அதற்கு பதில் பெற்றோர்களை கவனித்து அவர்களுக்கு உதவியாக இருங்கள் என்றும் கூறியுள்ளார்.

அதுபோல் மே 1-ந்தேதி அன்று பிறந்தநாள் கொண்டாட்டம் எதிலும் ஈடுபட வேணடாம் என்று வற்புறுத்தி உள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் போஸ்டர்கள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டனர். கட்-அவுட்கள் தயார் செய்வதையும் கைவிட்டு விட்டார்கள்.

இதுகுறித்து அஜீத் கூறும்போது, எனக்கு கட்-அவுட் பேனர்கள் வைக்கவும் போஸ்டர்கள் அச்சடிக்கவும் ரசிகர்கள் பணத்தை செலவு செய்ய வேண்டாம். அந்த பணத்தை ஏழைகள் படிப்புக்கும், அவர்களுக்கு உணவளிக்கவும் செலவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.

ரசிகர்கள் தனக்காக ஆடம்பர செலவுகள் செய்வதை தடுக்கவே ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum