தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிறிஸ்தவ கோவிலில் படமான நயன்தாரா-ஆர்யா திருமண காட்சி

Go down

கிறிஸ்தவ கோவிலில் படமான நயன்தாரா-ஆர்யா திருமண காட்சி Empty கிறிஸ்தவ கோவிலில் படமான நயன்தாரா-ஆர்யா திருமண காட்சி

Post  ishwarya Sat May 04, 2013 2:51 pm


நயன்தாரா-ஆர்யா இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே கிசு கிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது ‘ராஜாராணி’ படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள்.

பிரபு தேவா-நயன்தாரா காதல் முறிந்ததை ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்து கொண்டாடியதாக செய்தி பரவியது. அந்த விருந்துக்கு நயன்தாராவையும் அழைத்து இருந்தார்.

இந்த நிலையில் ராஜாராணி படப்பிடிப்பில் நயன்தாரா, ஆர்யா திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.

புனேயில் உள்ள கிறிஸ்தவ கோவிலில் இந்த காட்சியை எடுத்தனர். நயன்தாரா மணப்பெண்ணுக்கான வெள்ளை கவுன் அணிந்து இருந்தார். ஆர்யா கோட்சூட் அனிந்து இருந்தார். புனேயில் உள்ள பழமையான செயின்ட் மேரீஸ் சர்ச்சில் விசேஷ அனுமதி பெற்று திருமண சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். மூன்று நாட்கள் இந்த திருமண காட்சி படமானது உண்மையான திருமணம் போல் நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தை அட்லிகுமார் இயக்குகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum