நடிகை ரேவதி-சுரேஷ்மேனன் விவாகரத்து: கோர்ட்டு தீர்ப்பு
Page 1 of 1

நடிகை ரேவதி-இயக்குனர் சுரேஷ் சந்திரமேனன் ஆகியோருக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
‘மண்வாசனை’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷா கேளுண்ணி என்ற ரேவதி(வயது 43). இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான சுரேஷ் சந்திரமேனனும் (50) காதலித்து 10.9.86 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில், சுரேஷ் சந்திரமேனனுக்கும், ரேவதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு 1.10.2012 அன்று ரேவதியும், சுரேஷ் சந்திரமேனனும் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், எங்களுக்கு 10.9.1986 அன்று ஆலந்தூர் பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 7.11.2002 முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் இனி சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை. எங்களது திருமணத்தை ரத்து செய்து, பரஸ்பரம் விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-
சுரேஷ் சந்திரமேனனுக்கும், ஆஷா மேனனுக்கும் (ரேவதிக்கும்) கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் 2002-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளனர். இருவரும் நிர்பந்தம், மிரட்டல் ஆகியவைகளுக்காக பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை என்று இந்த கோர்ட்டு நம்புகிறது. மேலும், இருவரும் பராமரிப்பு செலவுகளை எதிர்காலத்துக்கும் கோரமாட்டோம் என்று கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்பதை முடிவு செய்து, இவர்களது பரஸ்பரம் விவாகரத்து வழங்கப்படுகிறது. 10.9.1986 அன்று நடந்த திருமணத்தை ரத்து செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை ரேவதி, சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பு
» நடிகை ரேவதி, சுரேஷ் மேனன் விவாகரத்து வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பு.
» கணவருடன் மோதல்: நடிகை பூமிகா விவாகரத்து?
» சோனியா – செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு!
» நடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து அளித்தது சென்னை கோர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum