ஆசை’ இல்லாவிட்டால் ஆயுள் நீளும்..!
Page 1 of 1
ஆசை’ இல்லாவிட்டால் ஆயுள் நீளும்..!
செக்ஸ் சுகத்துடன் குறைந்த காலம் வாழ விருப்பமா அல்லது உடலின்பம் என்பதையே அறியாமல் நீண்ட காலம் வாழ விருப்பமா? இப்படியரு கேள்வியை எவரிடம் கேட்டாலும் தடுமாறித்தான் போவார்கள். ஆனால் புதிய ஆய்வொன்று சொல்லும் சேதி இது: பாலியல் இன்பத்தைத் துறந்து வாழ்பவர்களின் ஆயுட்காலம், வழக்கமான தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களின் ஆயுளை விட அதிகமாக இருக்கிறது.
ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருந்தாலும் இது உண்மை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுதொடர்பான ஆய்வு, கொரியாவில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு, அரண்மனையில் பணிபுரிவதற்கு என்று சிலர் பையன் வயதிலேயே ஆண்மை நீக்கப்பட்டு, அரண்மனையில் நியமிக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.
14 முதல் 20-ம் நூற்றாண்டு வரை இவ்வாறு அரண்மனையில் பணிபுரிந்த பலரின் ஆயுளும், அதே சூழலில் வாழ்ந்த வழக்கமான மன்மத லீலை மனிதர்களின் ஆயுளும் ஒப்பிடப்பட்டது. அப்போது, பெண் வாடையே அறியாது அரண்மனையில் பணிபுரிந்த ஆண்களின் சராசரி ஆயுள் 70 ஆக இருந்தது என்றால், மற்ற சாதாரண மனிதர்களின் சராசரி ஆயுள் 56 ஆண்டுகளாக இருந்தது.
அதாவது 14 ஆண்டுகள் என்கிற பெரிய்...ய இடைவெளி. அந்தக் காலத்தில், பரிசுத்தமாக இருந்து நூறு வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கையும், தற்போது சதம் அடிப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக இருந்திருக்கிறது. இதெல்லாம், செக்ஸ் இல்லாவிட்டால் நீண்ட காலம் வாழலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன என்று அடித்துக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
சரி, இது உண்மையே என்று வைத்துக்கொண்டாலும், ஆரோக்கியமான, அவஸ்தையில்லாத, அதேநேரம் சுவாரசியமற்ற நூறு வயது வாழ ஒருவர் விரும்புவாரா அல்லது இஷ்டம் போல அனுபவித்துவிட்டு கொஞ்சம் முன்னதாகவே புறப்பட விரும்புவாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.
இயல்பாகவே எல்லோரும் இரண்டாவதையே டிக் செய்ய விரும்புவார்கள் என்றபோதும், நாம் எண்ணிப் பார்க்க முடியாத நீண்ட ஆயுட்காலம் கிடைக்கிறபோது நம்மால் எண்ணற்ற ஆக்கபூர்வ செயல்களைச் செய்ய முடியுமே என்பது சிலரின் வாதம். செக்சில் ஈடுபடுபவர், அந்த நேரத்தை மட்டும் அதில் செலவழிப்பதில்லை.
மாறாக, பெரும்பாலான நேரத்தை செக்ஸை பற்றி யோசிப்பதில் கழிக்கிறார், அடுத்து எப்போது, எங்கு செக்ஸ் வைத்துக் கொள்வது என்று யோசிக்கிறார், கடந்த காலத்தில் படுக்கையில் கழித்த விதம் குறித்து எண்ணி மகிழ்கிறார் அல்லது வருத்தத்தில் ஆழ்கிறார், அது கிடைக்காதபோது சோகத்தில் சுருள்கிறார்.
இப்படி நிறைய நேரமும், மனித சக்தியும் செக்ஸ் காரணமாக கரைந்தோடிப் போகிறது என்கிறார்கள் செக்ஸ் நாடாத சுத்தபத்தர்கள். இதில் உண்மை இல்லை என்று மறுக்க முடியாது. ஆண்கள் சராசரியாக 7 நொடிகளுக்கு ஒருமுறை செக்ஸ் பற்றி சிந்திக்கிறார்கள் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட செய்தி.
கண்ணாடிக் குடுவையில் நீந்தும் தங்கமானைப் போல ஆண்கள் மீண்டும் மீண்டும் செக்ஸையே சுற்றிவருகிறார்கள். உருப்படியாய் எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் மறுபடி மறுபடி அவர்கள் மனதை செக்ஸ் ஆக்கிரமித்துக்கொள்கிறது என்று வாதிடப்படுகிறது.
செக்சுக்காக, அதுகுறித்த சிந்தனைக்காக, பெண்களைக் கவர முயலும் சாகசப் பேச்சுக்காக, சல்லாப உரையாடலுக்காக, கிசு கிசுக்களை கேட்க, பரப்ப செலவிடும் நொடி நொடியான நேரத்தையெல்லாம் கூட்டினால், ஒருவரது ஆயுளில் அது ஆண்டுக்கணக்கில் ஆகும் என்பது வேணாம்... வேணாண்டா செக்ஸ் என்பவர்களின் கருத்து.
பெண்களைப் பார்வையால் மேய்வதில், அந்த மாதிரிக் காட்சிகளைக் காண்பதில், காதலிக்காக பூங்கொத்து தேர்ந்தெடுப்பதில், கவிதைக்காக மண்டையைப் பிறாண்டுவதில் மணித் துளிகள் மரணித்துப் போகின்றன. சரிப்பா, செக்ஸ் சிந்தனையே இல்லாவிட்டால் நிறைய நேரம் கிடைக்கும் என்பது உண்மைதான். அதை என்ன செய்யலாம்?
செய்ய நினைத்து, நேரமில்லை என்று தள்ளிப்போட்ட வேலைகளைச் செய்யலாம். பிடித்த விஷயங்களைச் செய்யலாம். இன்னும் ஒரு பட்டப்படிப்பு படிக்கலாம், தற்காப்பு கலை ஒன்றைக் கற்கலாம், புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம், சமூகம் குறித்து கூடுதலாக யோசிக்கலாம் என்கிறார்கள் பெண் பற்றைத் துறக்கச் சொல்லும் ஆய்வாளர்கள்.
ஆனால் இதையெல்லாம் புன்னகையோடு புறந்தள்ளும் செக்ஸ் சூரர்கள், செக்ஸ் இல்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்பவரும் கடைசியில் மண்ணுக்குள்தானே போகப் போகிறார்? அனுபவி ராஜா அனுபவி என்று பல்லவி பாடுகிறார்கள். ஒரு பிரசித்தி பெற்ற வாசகம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரலாம்...
பெண்கள் இல்லாமல் ஆண்களுக்கு ஆறுதல் கிடைக்காது... பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு ஆறுதலே தேவைப்படாது. அதைப்போல, செக்ஸ் இல்லாவிட்டால் பிரச்சினை இருக்காது... ஆனால் செக்ஸ் இன்றி வாழ்க்கையே ருசிக்காது என்கிறீர்கள்தானே? நீங்கள் சொல்வதும் சரிதான்!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்தியத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
» நானும் விமலும் சேர்ந்துதான் நாட்டைக் காத்தோம்... இல்லாவிட்டால் அதோ கதிதான்! - நந்தன
» ப்ரா அணிந்து மார்பை இறுக்கமாக வைத்திருந்தால்தான் தாய்ப்பால் ஊறும்; இல்லாவிட்டால் வற்றிவிடும் என்பது உண்மையா?
» நீண்ட ஆயுள் வாழ...
» மனிதன் ஆயுள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum