தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயுள் விருத்தியாக்கும் அமிர்தகடேஸ்வரர்

Go down

ஆயுள் விருத்தியாக்கும் அமிர்தகடேஸ்வரர் Empty ஆயுள் விருத்தியாக்கும் அமிர்தகடேஸ்வரர்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:54 pm

வில்வாரண்ய க்ஷேத்திரம் என்ற புகழ்பெற்ற தலம் இது. திருக்கடையூர் மயானம் என்பது மறுவி ‘திருமெய்ஞானம்’ என சித்தர்களாலும் பெரியோர்களாலும் போற்றப்படும் புண்ணிய க்ஷேத்திரம். எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர் ஆயினும் எத்துனை செல்வம் படைத்தவர் ஆயினும் ஞானியராயினும் அவரவருக்குரிய காலந்தாழ்த்தாது உடலில் இருந்து உயிரைப் பிரிக்கும் பணியை கொண்டவர் யமதர்மன். இவர் நொடிப்பொழுதும் காலம் தாழ்த்தாது பணி செய்வதினால் காலன் என்ற பெயரை கொண்டவர். இந்த யமதர்மனே இறந்து, மீண்டும் உயிர்பெற்ற தலம் இந்த அமிர்தகடேஸ்வரர் கொலுவிருக்கும் திருக்கடையூர். இங்கு சிவபெருமான் லிங்க வடிவத்தில் கோயில் கொண்டுள்ளார். இந்த லிங்கம் திருப்பாற்கடலில் தேவர்கள் அமிர்தம் கடையும் போது தோன்றியது. எனவே, பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி போன்றே இவரும் வெளிப்பட்டமையால் இவருக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். தேவர்கள் திருப்பாற்கடலை கடைகையில், விநாயகர் பூஜை செய்யாது பணியை ஆரம்பித்தார்கள். அமிர்தம் வெளிப்பட்டதும் தேவர்கள் அதனை ஒரு கலசத்தில் சேமித்து வைத்தனர். அதனை விநாயகர் எடுத்துக் கொண்டு மறைந்தார். பிறகு தேவர்கள் கணநாதனை தொழுது மீண்டும் அமிர்த கலசத்தை பெற்றனர். அன்று தொட்டு இங்குள்ள கணபதிக்கு ‘கள்ளப் பிள்ளையார்’ என்று பெயர் வந்தது. இவர் மிகவும் ஆற்றல் கொண்டவர். அன்றுமுதல்தான் கணபதியை திருடி ஸ்தாபித்து தொழுதால், காரிய சித்தி கிட்டும் என்ற தவறான நம்பிக்கையும் ஏற்பட்டது!
மிருகண்டு மகரிஷியின் பிள்ளையின்மையை போக்க, மார்க்கண்டேயன் என்ற மகனை சிவன் தந்தார். பதினாறு ஆண்டு மட்டுமே ஆயுளை... அற்ப ஆயுளை பெற்ற பாலகன், தனது அந்திம காலத்தில் நாரதரின் உபதேசப்படி, இந்த அமிர்தகடேஸ்வரரை ஆலிங்கனம் செய்தான். யமதர்மன் உயிரைக் கவ்வும் பாசக்கயிற்றை பாலகனாம் மார்க்கண்டேயன் மீது எறிய, அது சிவலிங்கத்தின் மீது விழ, சினம் கொண்ட ஈசன் யமனை சம்ஹாரம் செய்தார். பின் மார்க்கண்டேயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மாண்ட காலன் மீண்டும் உயிர் பெற்றான். இன்றும் சித்திரை மாதத்தில் கால சம்ஹாரம் என்ற திருவிழா மிக விமரிசையுடன் இங்கே நடைபெறுகிறது.

ஒவ்வொருவரும் அறுபது வயதை நிறைவு செய்யும்போது ‘சஷ்டியப்த பூர்த்தி’ என்ற ஹோமம் இயற்ற வேண்டும். அதனை இங்கு செய்தால் ஆயுள் உறுதிபெறும் என்பார்கள். யமதர்மனும் இவ்வாறு அமிர்தகடேஸ்வரரின் அருள் பெற்றவரை விட்டு சற்று தள்ளியே நிற்பான்’ என்கிறார், அகஸ்தியர். ‘பாற்கடல் தோன்றிய யீசனை தொழுபவர் பிணிபோம் - காலனும்
காலந்தாழ்த்த ஆயுளும் வ்ருத்தி ஆகும், மணிப்பூசை புரியுந்தம்பதியர் பின்னையும் பிரியாது கூடுவரே’

இந்த திவ்ய க்ஷேத்திரத்தில், அறுபதாம் கல்யாணம் செய்யும் தம்பதியர், நீடு வாழ்தல் அல்லால், மறு பிறவியிலும் கணவன்-மனைவியாக இணைவர். மார்க்கண்டேயன் மீது வீசிய யமனின் கயிற்றின் வடுவை இன்றும் அமிர்தகடேஸ்வரரின் மேனியில் காணலாம். பீமரதசாந்தி என்பது எழுபது வயது எட்டியவரும், சதாபிஷேகம் என்பது எண்பது வயதை தொட்டவரும் மேற்கொள்ளும் ஆயுள் விருத்தி ஹோமங்களாகும். அந்த விசேஷத்தை இந்த க்ஷேத்திரத்தில் வந்து ஆற்றினால், ஈசன் அருள் வினைப் பயனை அறுக்கும்; வாரிசுகளின் நலனையும் காக்கும். ஞானியருக்கெல்லாம் ஆசாரியனாகத் திகழும் எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையாக விளங்கும் பிரம்மதேவனே இங்கே ஞான உபதேசம் பெற்றிருக்கிறான். பெண்களையெல்லாம் பெண்தெய்வங்களாகப் போற்றியவர் அபிராமி பட்டர். அமிர்தகடேஸ்வரரின் நாயகிக்கு அன்னை அபிராமி என்று பெயர். இந்த அன்னை சாந்த ஸ்வரூபி மட்டுமல்ல; எல்லா பக்தர்களுடைய குறைகளையும் தானே நேரில் சென்று தீர்ப்பவள். அன்னை அபிராமியை அகஸ்தியர்
இவ்வாறு பாடுகிறார்.

‘‘குடத்துதிக்க செய்தனை - குறை
எல்லாம் போக்கும் அன்னை நீ -
பல உருகொண்டு பக்தரை நாடி
ஓடி பணிசெய்யும் பரிமளமே -
உனை நாடி வருவோரின் துயரை
உனைப் போல் துடைப்பாரார் ஓது’’

அன்னை மேல் பக்தி கொண்டு பித்தனாக அமர்ந்திருந்த பட்டரிடம், ‘எனக்கு ஏன் அவமரியாதை செய்தாய்?’ என்று கோபித்தான், சரபோஜி மாமன்னன். பக்திமானுக்கு, மன்னன்-சாமான்யன் என்ற பேதம் ஏது? குழம்பிய பட்டரை நோக்கி, ‘‘இன்று என்ன திதி?’’ என்று கேட்டான், மன்னன். என்ன திதி, யாரிடம் பேசுகிறோம், எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம், பக்தி வெள்ளத்தில் மிதக்கும் சாதாரண மனிதனுக்கே தெரியாது. அபிராமியின் அருள்பெற்ற சித்தரை பற்றி சொல்லவும் வேண்டுமோ? ஆகவே, ‘‘முழுமதி திதி’’ என்றார், சித்தர்.
கோபம் கொண்ட மன்னன், ‘‘இன்று பூர்ண அமாவாசை. அதனால் தான் கோயிலுக்கு வந்தேன்; எனக்கே தவறான தகவல் தருகிறாயே!’’ என கோபித்து தீயில் அவர் இடப்படும் தண்டனையை அளித்தான். எரியும் தணல்மேல் ஊஞ்சலில் நின்ற பட்டர், அன்னை அபிராமியை அந்தாதி என்ற பாடல்முறையில் துதி செய்ய, ஊஞ்சலில் நின்ற பட்டரை சிறிது சிறிதாக எரியும் தீ தீண்ட முயற்சித்தது. 79வது பாடலின்போது வானில் முழுநிலவு வந்தது. அதைக் கண்டு திடுக்கிட்டு வியந்த மன்னன் தன் தவறை உணர்ந்து பட்டரை சரணடைந்தான். அன்று தொட்டு அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி, பக்தருக்கு குறை தீர்க்கும் மருந்தாயிற்று.

‘அபிராமி யந்தாதியை யனுதினமும்
மும்முறை ஓதுவார் தம்
அல்லல் போம் - அறுவினை போம் -
தீராபிணி தீருமதனோடு எண்ணாத
திரவியமுங் கூடுமென்றறிவீரே’
- காகபுஜண்டர்

இங்குள்ள யமதர்மராஜன் மிகவும் பக்திமான். சாந்த மூர்த்தி, கருணை கொண்டவன். இவரைத் தொழுது வருபவருக்கு யமதர்மனால் அல்லது அவனது பரிவாரங்களினால் வரும் மரண கால அவஸ்தை கண்டிப்பாக வராது. மேலும் கொடிய நோய்கள், உதாரணமாக உடல் உறுப்புகளை இழத்தல், வாதம், நரம்பு சம்பந்தமான பெரிய நோய், தோல் சம்பந்தமான நோய், புற்று நோய் போன்றன வராது. வந்தாலும் குணம் காணும் என்கிறார், சிவவாக்ய முனி. ‘கடேசுவர காலனை கை தொழுவீர். தொழதக்கால் நமன்தமரால் வருமப்பீடையும் வாதையும் விலகும். ஆராப்புண்ணும், ரணமும் பிணியுமாறுமிது சத்தியமே.’ நமது முன்னோர்கள் தியானம், தவம், துறவு என்று பலவழிகளை நமக்கு போதித்து, வாழ்வில் வரும் சோதனைகளை எதிர்கொள்ள நம்மை ஆயத்தம் செய்தனர். ஆனால் இவற்றைவிட, சோதனைகளை வென்று வெற்றிவாகை சூடி இறைவனை அடையலாம் என்று காட்டிய எளிய வழி - ஆலய தரிசனம், அர்ச்சாவதார வழிபாடு. அந்தவகையில் திருப்பாற்கடலில் அவதாரம் செய்து, யம பயத்தை போக்கி, ஆயுளை நீட்டிப்பு செய்து கொடிய பகைகளையும் வென்று வாழ்வில் எண்ணற்ற இன்பத்தை தருவதுதான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்-அபிராமி கோயில்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum