தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

186 ரன் இலக்கை சேஸ் செய்தது அற்புதமானது: கில்கிறிஸ்ட்

Go down

186 ரன் இலக்கை சேஸ் செய்தது அற்புதமானது: கில்கிறிஸ்ட் Empty 186 ரன் இலக்கை சேஸ் செய்தது அற்புதமானது: கில்கிறிஸ்ட்

Post  ishwarya Sat May 04, 2013 12:25 pm

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி பரபரப்பான ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வென்றது. முதலில் விளையாடிய புனே வாரியர்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. தொடக்க வீரரும், கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் 42 பந்தில் 64 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), லுகே ரைட் 10 பந்தில் 34 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), யுவராஜ்சிங் 24 பந்தில் 34 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 41 பந்தில் 80 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), மன்தீப்சிங் 58 பந்தில் 77 ரன்னும் எடுத்தனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்தனர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. லுகே ரைட் வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் மில்லர் சிக்சர் அடித்தார். அதற்கு அடுத்த பந்தில் 2 ரன் எடுத்தார். கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 6 ரன் தேவை. 5-வது பந்தில் மில்லர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவரே ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-

186 ரன் இலக்கை சேஸ் செய்தது மிகவும் அற்புதமானது. இது ஒரு சிறந்த சேசிஸ் ஆகும். இதற்காக மில்லர், மன்தீப் சிங்கை பாராட்டுகிறேன். இருவரது ஆட்டமும் சிறப்பாக இருந்தது. இதேபோல வோராவும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார். டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது கடின முடிவே. ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்ததால் இந்த ரன் இலக்கை எட்ட முடிந்தது. இந்த வெற்றி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.

தோல்வி குறித்து புனே வாரியர்ஸ் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும்போது, மில்லர், மன்தீப் பேட்டிங் அபாரமாக இருந்தது. இருவரும் எங்கள் வெற்றியை பறித்துவிட்டனர். 185 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான் என்றார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெற்ற 3-வது வெற்றியாகும். அந்த அணி 7-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை நாளை (செவ்வாய்க்கிழமை) எதிர்கொள்கிறது. புனே வாரியர்ஸ் அணி 5-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூர் அணியை நாளை சந்திக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum