ஆயுர்வேதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான உணவுகள்
Page 1 of 1

கருவுற்ற பெண்களுக்கு பால் சத்தான உணவு, பால் மிகுந்த சூடு இல்லாமல் ஆறி இருப்பது நல்லது. கருவுற்ற முதல் மாதம் பாலுடன் சித்தாமுட்டி (குறுந்தொட்டி) என்ற மூலிகையை காய்ச்சி ஆற வைத்து கொடுப்பது நல்லது.
• கர்ப்பிணி பெண்களுக்கு எல்லா மாதமும் பால் பத்தியமான உணவு,அரிசி, கோதுமை நெய் போன்ற சத்து நிறைந்த உணவுகளை தாய் சரியான விகிதத்தில் உட்கொள்ள வேண்டும்.
• பாலுடன் இனிப்பு சுவை கொண்ட அதிமதுரம், தண்ணீர் விட்டான் கிழங்கு போன்ற மூலிகைகளை சேர்த்து காய்ச்சி 2-வது மாதத்தில் உட்கொள்ளலாம்.
• 3-வது மாதத்தில் காய்ச்சி சூடு ஆறிய பாலில் தேன், நெய் கலந்து உட்கொள்வது நல்லது.
• 4-வது மாதத்தில் பாலுடன் ஒரு கிராம் வெண்ணெய் சேர்த்து கொடுக்க வேண்டும. அவ்வப்போது மாமிச உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• 5-வது மாதத்தில் பாலில் இருந்து கடைந்து எடுத்த வெண்ணெயை நெய்யாக காய்ச்சி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• 6-வது மாதத்தில் மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட நெய்யுடன் பேரீச்சப்பழம், அதிமதுரம், திராட்சை, தண்ணீர் விட்டான்(பால்முதுக்கன் கிழங்கு) போன்ற இனிப்பு சுவை சேர்த்த மூலிகை மருந்துகளை சேர்த்து காய்ச்சி கொடுக்க வேண்டும்.
• கர்ப்பிணி பெண்கள் 6-வது மாதம் வரை பின்பற்ற வேண்டிய உணவுபத்தியத்தை 7-வது மாதமும் கடைபிடிக்க வேண்டும்.
• 8-வது மாதத்தில் நாள்தோறும் அரிசிக் கஞ்சியில் பாலும், நெய்யும் கலந்து உட்கொள்ள வேண்டும்.
• 9-வது மாதத்தில் பால்,நெய், இறைச்சி, அரிசி கஞ்சி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். தான்வந்திர தைலத்தை வயிறு, இடுப்பு பகுதிகளில் தடவலாம். பஞ்சு அல்லது சுத்தமான துணியில் தைலத்தை நனைத்து பிறப்பு உறுப்பில் தினமும் வைக்க வேண்டும். இதனால் இடுப்பு, பிறப்பு உறுப்பு மிருதுவாகி சுகப்பிரசவத்துக்கு வழி கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்துக்கும், பலத்துக்கும் இந்த முறை வழி வகுக்கும்.
• பிரசவத்துக்கு பின்னர் தசமூலாரிஷ்டம், ஜீரகாதியரிஷ்டம் ஆகியவற்றை கலந்து 30 மல்லி எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் 30 மில்லி நீர் கலந்து உணவுக்குப் பின்னர் 2 வேளை உள்கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சவுபாக்கிய சுண்டியை உணவுக்குப் பின்னர் சாப்பிடலாம்.தன்வந்திர தைலத்தை இடுப்பில் தேய்த்து குளிப்பது நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பிணி பெண்களுக்கான பூனை ஆசனம்
» கர்ப்பிணி பெண்களுக்கான இயற்கை மருத்துவம்
» பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ப்ரக்ருதி முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படு
» கர்ப்பிணி பெண்களுக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum