தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பந்துவீச கூடுதல் நேரம்: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு அபராதம்

Go down

பந்துவீச கூடுதல் நேரம்: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு அபராதம் Empty பந்துவீச கூடுதல் நேரம்: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு அபராதம்

Post  ishwarya Sat May 04, 2013 12:06 pm

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களுக்கு 200 ரன்கள் சேர்த்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் இப்போட்டியில் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர்கள் பந்து வீசி முடிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சூப்பர் கிங்ஸ் அணி, 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. இதற்காக தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ஐ.பி.எல். அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பந்துவீச கூடுதல் நேரம்: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு அபராதம்
» ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை நசுக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
» புனே வாரியர்சுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா?
» 2 இலங்கை வீரர்களை நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு
» புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தை பிடித்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum