ஸ்ரீசொர்ணாம்பிகை உடனுறை புஷ்பரதேஸ்வரர் கோவில்
Page 1 of 1

சோழ மன்னர் ஒருவர் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மீது படையெடுத்து வெற்றிக்கண்டு திரும்பினார். அப்போது சென்னை அடுத்த சோழவரத்தில் முகாமிட்டார். அவர் ஒரு சிவபக்தர். சிவனை வழிபட செந்தாமரை மலர்களை தேடிக்கொண்டு ஞாயிறு கிராமத்தில் இருந்த தாமரை குளத்தை பார்த்தார்.
அந்த குளத்தில் தாமரை மலர்களில் ஒரு மலர் மட்டும் பிரகாசமாக உயர்ந்து நின்று அழைப்பது போல் காட்சி தந்தது. சிவனுக்கு பூஜையிட அந்த மலரை பறிக்க முயன்ற போது தாமரை மலரை பிடுங்க முடியவில்லை. மன்னர் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தாமரை மலர் மீது வீசினார்.
அப்போது கத்தி துள்ளிச்சென்று எங்கோ போய் விழுந்தது. கத்தி விழுந்த இடம் தற்போது `கத்திவாக்கம்' எனவும் கத்தியின் கைப்பிடி விழுந்த இடம் `கண்டிகை' எனவும் மயங்கி அரகன் விழுந்த இடம் `மாரம்பேடு' எனவும் குதிரை விழுந்த இடம் `குதிரை பள்ளம்' என இன்றும் அழைக்கப்படுகிறது.
உபதேச தடாகத்தில் இருந்த தாமரை மலர் மீது சிவபெருமான் காட்சி தந்து அந்த அரசனிடம் இங்கு கருவறை கட்ட சொன்னதாக வரலாறு கூறுகிறது. தேடி பார்த்த போது சிவபெருமான் தலையில் அடிப்பட்டு கிடந்ததாக வரலாறு. இன்றும் இங்குள்ள சிவலிங்கம் நெற்றியில் தழும்பு இருக்கிறது.
இந்த கோவில் 3 பங்கு நீர்நிலையிலும் ஒரு பங்கு ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது. தாமரைப்பூவில் எழுந்தருளியதால் இறைவன் புஷ்பரதேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் சொர்ணம்பிகை கிழக்கு பார்த்தவாறு கல்யாண கோலத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. உலகம் தோன்றியது ஒளி, ஒலியிலிருந்து என்கிறது புராணம்.
அதிலும் முதலில் தோன்றியது ஒளிதான். அந்த ஒளிக்கடவுளாக திகழ்பவன் ஆதித்யன் என்று அழைக்கப்படும் சூரியனே நம் உடலில் உள்ள வெப்பமே நம்மை இயங்க செய்கிறது. இதனால் பாரதியார் கூட ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்றே கூறினார். இப்பேற்பட்ட சூரிய பகவான் சாபம் காரணமாக தன் மனைவி சாயாதேவியை பிரிந்து இருந்தார்.
சூரியன் மீண்டும் தன் மனைவியைச் சேர்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்து அருணகிரியை வலம் வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் தோன்றிய ஜோதிவானில் ஊர்ந்து வந்து ஞாயிறு தலத்தில் உள்ள சிவமூர்த்தியில் ஒன்றியதை கண்டான். உடனே சூரியன் ஞாயிறு தலத்திற்கு வந்து செந்தாமரை மலரில் அம்மைய்ப்பர் அருள் பாவித்ததை கண்டு செந்தாமரை மலர் கொண்டு பூஜை செய்தார்.
சூரியனின் பூஜையை ஏற்றுக்கொண்ட சிவனாரும் சூரியனுக்கு தரிசனம் தந்து அருளினார். சூரியன் வணங்கிய இத்தலத்தில் ஞாயிறு முதன்மையானது. இதனால் ஆண்டில் சித்திரை மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை சூரியன் 6.10 மணிக்கு தன் ஒளிக்கதிரை இக்கோவிலின் சிவலிங்கத்தின் மேல் விழ செய்து ஒளி ரூபமாக சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுவது சிறப்பானதாகும்.
இதனால் இந்த கிராமம் ஞாயிறு கிராமம் என போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் மனைவி சங்கிலி நாச்சியார் ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர்.
நடை திறக்கும் நேரம்.... இந்த கோவிலில் நாள்தோறும் 2 கால பூஜைகள் காலை 7.30-11 மணி முதல் மாலை 4.30 முதல் 7.30 வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 1 மணி வரையில் நடைபெறுகின்றன.
பரிகாரம்.... ஞாயிறு தோறும் இங்கு வழிபட்டு வந்தால் கண்பார்வை கோளாறு நீங்கும், கணவன்-மனைவியிடையே சண்டைகள் தீர இங்கு வழிபாடு செய்யலாம். மூன்று வாரத்தில் தம்பதிகள் ஒன்று சேர்வர் என நம்பிக்கை. உத்யோக பலன், தொழில் பலன் கிட்டும். கிருத்திகை காலங்களில் வழிபட்டால் கஷ்டங்கள் தீரும்.
போக்குவரத்து வசதி..... இந்த கோவில் சென்னையிலிருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோயம்பேட்டிலிருந்து 157 சி, செங்குன்றத்திலிருந்து 57சி, 58ஏ, ஐகோர்ட்டிலிருந்து 589 பஸ்கள் ஞாயிறு கிராமத்துக்கு செல்கின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீசொர்ணாம்பிகை உடனுறை புஷ்பரதேஸ்வரர் கோவில்
» புஷ்பரதேஸ்வரர் ஆலயம்
» ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum