தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு

Go down

மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு Empty மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு

Post  meenu Mon Feb 11, 2013 6:19 pm

பெண்கள் பிறக்கும் போது மிகவும் குண்டாகவும், நீளமாகவும் இருப்பார்களானால், அவர்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

உலக அளவில் புற்றுநோயால் பெண்கள் மரணம் அடைவதில், மார்பகப் புற்றுநோய் மிக முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது பெண்குழந்தைகள் பிறக்கும்போதே உடல் பருமன் அதிகமாகவும், நீளமாகவும் இருக்கும் நிலையில், பின்னாளில் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி மார்பகப் புற்றுநோய்க்கும், குழந்தைப் பருவத்தில் எடைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பிறக்கும்போது குண்டாக இருந்த சுமார் 6 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 22 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.

பெண்களின் வயது, தாமதமான மாதவிலக்கு நிற்பது போன்ற காரணங்களுடன் குழந்தைப் பருவத்தில் குண்டாக இருப்பதும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குழந்தைப் பருவத்தில் நீளமான உடல்வாகைக் கொண்டிருந்தால் மார்பகப் புற்று நோய் வாய்ப்பு அதிகம் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பெண் குழந்தைகள் 4 கிலோ அல்லது அதற்கு மேல் எடை இருப்பின் மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு சுமார் 12 விழுக்காடு அதிகம் என்றும் அது கூறுகிறது.

சுமார் 80 வயதாகும் பெண்களுக்கு அவர்களின் குழந்தைப் பருவ எடை காரணமாக 5 விழுக்காடு அளவு மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு உருவாகும் என்றும் அது தெரிகிறது. வேறு சில ஆய்வுகளின்படி, குழந்தைப்பருவ உடல் எடை பின்னாளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum