கடவுள் என்னிடம் பேசினார்: மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவர் சொல்கிறார்
Page 1 of 1

அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் வசிக்கும் தம்பதியர் டான் ஹூஸ்டன்- ரீட்டா. 62 வயதாகும் டான், இதய நோயாளி ஆவார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு முன்னால், ஒரு நாள் இரவு தூங்கும்போது டானுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் படுத்திருந்த ரிட்டா கண் விழித்துப் பார்த்தபோது, டானின் மூர்ச்சையாகி கிடந்ததையும், நாக்கு வெளித்தள்ளி இருந்தததையும் கவனித்து, அவசர உதவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் உடனே செய்ய வேண்டிய முதலுதவிக் குறிப்புகளைக் கூறியுள்ளனர்.
பின்னர் மருத்துவ உதவியாளர்கள் மூன்று முறை அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து, ஒக்லஹாமா நகர மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்தபோதும், டானின் நிலைமை சீரடையாததால், அவரது மனைவி ரீட்டா பிரார்த்தனை செய்ய சென்றுள்ளார். அப்போது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில், டானின் இதயம் செயல்பட ஆரம்பித்தது. ஆனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் தனக்கு அற்புதமான அனுபவம் ஏற்பட்டதாகவும், கடவுள் தன்னிடம் பேசியதாகவும் டான் கூறுகிறார்.
“சுயநினைவற்ற நிலையில், மருத்துவமனையில் எனக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டபோது, நான் மற்றொரு அறைக்குள் நுழைந்ததுபோன்று தெரிந்தது. அங்கு அனைத்துமே வெள்ளை நிறத்தில் இருந்தது. அமைதியாகவும், கனவு போல் தோற்றமளித்தாலும், அனைத்தும் உண்மையாகத் தெரிந்தது. அங்கு நான் தேவதைகளையும், கடவுளையும் கண்டேன். கடவுள் என்னிடம் பேசினார்.
ஒரு தேவதை இரண்டு கதவுகளை என் முன்னால் காட்டியது. இரண்டாவது கதவின்முன் நின்று, என்னை அதன் வழியே வரும்படி அழைத்தது. அங்கே மருத்துவர்களை நான் பார்த்தேன்” என்று டான் கூறுகிறார். கிறிஸ்தவரான டான், இறப்பிற்குப்பின் யாரும் தனியாக இருப்பதில்லை, அங்கும் வாழ்க்கை இருக்கிறது என்று, தான் அனுபவித்ததை அனைவருக்கும் தெரிவிக்க ஆர்வமாக உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாரடைப்பில் இருந்து பெண்கள் விடுதலை ஆவது எப்படி?
» உயிருக்கும் உயிர் கடவுள்
» யானைகளிடம் இருந்து கார்த்தி, அனுஷ்கா உயிர் தப்பினர்
» கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
» ‘கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum