சரப்ஜித் சிங் சாவு: பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம்
Page 1 of 1

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங், கடந்த மாதம் 26-ம் தேதி ஜின்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த நிலையில், கோமா நிலையில் உயிருக்குப் போராடிய அவர் இன்று அதிகாலையில் இறந்தார். தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சரப்ஜித் சிங் இறந்ததாகவும், இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் பிரேத பரிசோதனை முடிந்ததும், சரப்ஜித் சிங் உடலை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில், சரப்ஜித் சிங்கை பாதுகாக்க பாகிஸ்தான் தவறிவிட்டது என்று இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சரப்ஜித் சிங் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க இந்தியா விரும்பவில்லை. இருநாட்டு ஒப்பந்தத்தை நாங்கள் மதித்து நடக்கிறோம். ஆனால், பாகிஸ்தான் சரப்ஜித் சிங்கை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. சிறையில் உள்ள கைதிகளுக்கு அந்த நாடுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது உலக நெறிமுறை.
எனவே, சரப்ஜித் சிங் பாதுகாப்புக்கும் பாகிஸ்தான் பொறுப்பு என்பதில் வாதத்திற்கு இடம் இல்லை. 215 இந்திய மீனவர்கள் மற்றும் 55 மற்ற இந்தியர்கள் பாகிஸ்தான் முழுவதிலும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சரப்ஜித் சிங் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அவருக்கு மருத்துவமனையில் செயற்கை சுவாசத்தை நீக்குவது தொடர்பாக எங்களிடம் பாகிஸ்தான் ஆலோசிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரப்ஜித் சிங் மரணம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்
» லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்
» தனி விமானம் மூலம் சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது
» சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு
» சரப்ஜித் சிங் உடலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்: டெல்லியில் இருந்து விமானம் விரைவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum