தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதல்: போலீஸ் அதிகாரி மனைவியுடன் பலி
Page 1 of 1

கோவையை அடுத்த வெள்ளக்கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கனகராஜ்(வயது 62). இவர் திருச்சி மாநகர காவல் துறையில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மோசியாள்(58). கனகராஜ் தனது மகளை நாகர்கோவிலில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
தற்போது அவர் கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கனகராஜின் மகனுக்கு கடந்த வாரம் நாகர்கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர் கனகராஜின் மகள் தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
மகளை அவரது கணவர் வீட்டில் கொண்டு விடுவதற்காக கனகராஜும், அவரது மனைவியும் நாகர்கோவிலுக்கு காரில் சென்றனர். மகளை நாகர்கோவிலில் விட்டு விட்டு கணவனும், மனைவியும் நேற்று இரவு காரில் வெள்ளக்கிணறுக்கு கிளம்பினர். காரை கனகராஜ் ஓட்டி வந்தார். கார் இன்று அதிகாலை தாராபுரம்-ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் தாராபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி முட்டைக்கூடு போல நொறுங்கியது. இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். மோசியாள் தலைதுண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். கனகராஜ் வந்த காரின் இன்டிகேட்டர் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சாலையோரமாக யாரோ காரை நிறுத்தி இருக்கிறார்கள் என நினைத்து விபத்தை சரியாக கவனிக்காமல் சென்று விட்டனர். அந்த வழியாக வந்த 2 பேர் காரின் முன்பகுதி முட்டைக்கூடு போல் நொறுங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
காருக்குள் எட்டிப்பார்த்த போது முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். ஒரு பெண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தார். இந்த கோர விபத்து குறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். காருக்குள் பிணமாக கிடந்த 2 உடல்கைளயும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய கார் கனகராஜ் மகன் திருமணத்தின் போது தான் புதிதாக வாங்கப்பட்டதாகும். வித்தில் பலியான கனகராஜ் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு தாராபுரம் அருகேயுள்ள குண்டடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். கனகராஜ்- மோசியாள் உடல்களைப்பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருக்கழுக்குன்றம் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு-50 பேர் கைது
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி
» குமுளி அருகே 1000 அடி பள்ளத்தில் கார் உருண்டு கேரள டாக்டர்கள் 4 பேர் பலி
» தொடர் மோதல் எதிரொலி : போலீஸ் சீர்திருத்த சட்டம் ; மத்திய, மாநிலஅரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum