திருக்கழுக்குன்றம் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு-50 பேர் கைது
Page 1 of 1

திருக்கழுக்குன்றத்தை அடுத்த குன்னவாக்கத்தைச் சேர்ந்தவர் உமாபதி. நேற்று மாலை திருக்கழுக்குன்றம் சாலை ஓரத்தில் நின்றபோது அவ்வழியே வந்த “டாடா மேஜிக்” வேன் மோதி படுகாயம் அடைந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் வேன் டிரைவர் நடுவக் கரையைச் சேர்ந்த சுந்தரை சரமாரியாக தாக்கி விரட்டியடித்தனர். மேலும் வேனையும் சிறை பிடித்து நொறுக்கி, மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.
இதையடுத்து சமாதானம் பேசுவதற்காக சுந்தர், தாய் மஞ்சுளாவை அப்பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி அறிந்ததும் நடுவக்கரையைச் சேர்ந்த மக்கள் ஆவேசம் அடைந்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
நேற்று இரவு குன்ன வாக்கத்தைச் சேர்ந்த 50-க் கும் மேற்பட்டோர் உருட்டுக்கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நடுவக் கரையைச் சேர்ந்தவர்களை தாக்குவதாக திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று குன்னவாக்கம் பகுதியில் கும்பலாக நின்றவர்களை கலைந்து போகுமாறு தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து வந்த கல் போலீஸ் ஜீப் மீது விழுந்தது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து கும்பலை கலைந்து போகச் செய்தனர். இதே போல் நடுவக்கரையில் திரண்டு நின்றவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர்.
தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடித்து வருகிறது. மோதலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தன்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 2 கிராமங்களிலும் அவர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இதுவரை மோதல் தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் காஞ்சீபுரம், செங்கல்பட்டில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதல்: போலீஸ் அதிகாரி மனைவியுடன் பலி
» பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 150 பேர் கைது
» நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்த அரசு பஸ், லாரி மீது மோதல்: டிரைவர் பலி மாணவ–மாணவிகள் உள்பட பயணிகள் 17 பேர் காயம்
» உட்கட்சி தேர்தலில் தகராறு: குமரி மாவட்ட தி.மு.க. அலுவலகம் மீது கல்வீச்சு
» திருவண்ணாமலையில் தனுஷ் ரசிகர்கள் கோஷ்டி மோதல் – 3 பேருக்கு மண்டை உடைந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum