தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈஷா‌வி‌ல் டெ‌ங்கு நோ‌ய் மரு‌ந்துக‌ள்!

Go down

ஈஷா‌வி‌ல் டெ‌ங்கு நோ‌ய் மரு‌ந்துக‌ள்! Empty ஈஷா‌வி‌ல் டெ‌ங்கு நோ‌ய் மரு‌ந்துக‌ள்!

Post  ishwarya Fri May 03, 2013 12:15 pm

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, டெங்கு வராமல் தடுக்கவும், வந்தாலும் அதன் தீவிரத்தை குறைக்கவும், சித்தர்கள் அருளிய வகையில் இரண்டு அற்புத மூலிகை மருந்துகள் ஈஷா ஆரோக்யாவில் மக்களுக்கு அளிக்கப்படுகின்றன.

டெங்குவிற்கு ஆங்கில சித்தா கூட்டு மருத்துவம்;

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்த தற்கால சூழ்நிலையில் ஏதேனும் ஒரு மருத்துவ முறையை மட்டுமே சார்ந்திருப்பது போதுமானதாக இருக்காது.

நவீன விஞ்ஞானத்தின் குழந்தையான ஆங்கில மருத்துவம், நம் சித்தர்கள், ஞானிகளின் மெய்ஞானக் குழந்தையான சித்த மருத்துவம் இவை இரண்டையும் சரியான விகிதத்தில் ஒன்றாய் பொருந்தி வரும்போது டெங்குவிற்கு முழுமையான தீர்வு கிடைக்கும். இதுவே ஈஷா ஆரோக்யாவில் நடைமுறையிலும் உள்ளது.

டெங்கு நோய் தடுப்பிற்கு சித்த மருந்துகள்;

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, டெங்கு வராமல் தடுக்கவும், வந்தாலும் அதன் தீவிரத்தை குறைக்கவும், சித்தர்கள் அருளிய வகையில் இரண்டு அற்புத மூலிகை மருந்துகள் ஈஷா ஆரோக்யாவில் மக்களுக்கு அளிக்கப்படுகின்றன.

நிலவேம்பு தூள் மற்றும் ஆடாதொடைத் தூள்;

சில ஆண்டுகளுக்கு முன்னர், மக்களை முடங்கி போட்ட சிக்குன்குன்யா காய்ச்சல் தாக்கியபோது,. இவ்விரு மூலிகை மருந்துகளின் அற்புதத்தை அரசே உணர்ந்து, அரசின் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இவை கிடைக்க ஆவண செய்தது. இவை ஈஷா ஆரோக்கிய மையங்களிலும் பிற சித்த மருந்தகளிலும் கிடைக்கின்றன. இவற்றை டெங்கு வராமல் தடுக்க, அனைத்து வயதினரும் இதனை 7 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.

மருந்து செய்முறை;

200 மிலி தண்ணீரில், 2 ஸ்பூன் மூலிகைத் தூள் விட்டு, 50 மில்லியாய் காய்ச்சி வடிகட்டி காலை நிலவேம்பும், மாலை ஆடாதொடையும் குடித்து வருதல் நலம் பயக்கும். கர்ப்பிணி பெண்களும் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானது.

ஆங்கில மருத்துவத்தில், டெங்குவின் தீவிரத்திற்கேற்ப, வலி நிவாரணிகள் மூலம் காய்ச்சல், வலியை தற்காலிகமாக குறைக்க முடியும். கஷாயங்களுடன், தேவையெனில் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவரின் வழிகாட்டுதலின் பெரில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அவசியம்தான்.

ஈஷா ஆரோக்யா மையங்கள் தற்போது சேலம், கரூர் மற்றும் சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சித்தா, ஆயுர்வேதம் போன்ற நம் நாட்டின் தொன்மையான மருத்துவ முறைகளுடன் நவீன கால ஆங்கில மருத்துவ முறையையும் சரிவிகிதத்தில் கலந்து இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் மேலும் பல நகரங்களில் ஈஷா ஆரோக்யா மையங்கள் செயல்படவுள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum