தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாக்குதலை சமாளிக்க சில வழிகள்

Go down

தாக்குதலை சமாளிக்க சில வழிகள் Empty தாக்குதலை சமாளிக்க சில வழிகள்

Post  meenu Tue Jan 22, 2013 2:33 pm

பெண்கள் ஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடத்தில் ஆணால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தோன்றினால் அந்த இடத்தில் உள்ள பொருட்களை வைத்து அவனை எப்படித் தாக்கலாம், எப்படித் தப்பிக்கலாம் என்பதை முதலில் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது மனக்கண்ணில் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

அப்படிச் செய்தால் ஒருவேளை நிஜமாகவே தாக்குதல் நிகழும் போது தப்பிப்பது எளிதாக இருக்கும். உதாரணமாக ஹோட்டலில் உட்கார்ந்திருக்கும் போது ஓர் ஆண் கெட்ட நோக்கத்துடன் தன்னை நெருங்கி வந்தால் சூடான காபியை அவன் முகத்தில் ஊற்றி அவனை நிலைகுலையச் செய்து விட்டு தப்பித்து விடலாம்.

பெண்கள் தங்கள் கைப்பையில் எப்பொழுதும் ஒரு விசிலை வைத்துக் கொள்ள வேண்டும். ஆணின் தாக்குதல் நிகழும்போது அந்த விசிலால் ஒலியெழுப்பினால் அக்கம்பக்கம் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். ஏனெனில் உரத்த குரலில் கத்துவது எல்லாருக்கும் முடியாது. இப்போது பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்புப் பொருட்கள் வந்துவிட்டன.

அவற்றையும் பயன்படுத்தலாம். கூட்டமுள்ள பகுதிகளில் பெண்கள் நடந்து செல்லும்போது கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. கைகளைக் கட்டிக் கொண்டு நடந்தால் பின்புறம் இருந்து பிடிப்பவரையோ, அருகே வந்து இடிப்பவரையோ முழங்கையால் தாக்க முடியும்.

துப்பட்டாவின் நுனிகள் முதுகுப்புறம் வரும்படி போட்டால் பின்புறமிருந்து துப்பட்டாவை இழுப்பார்கள். அப்போது நமது உடைகள் கிழிந்து விடும். கழுத்து நெரிபடும். முன்புறம் போட்டால் இந்தப் பிரச்சினையில்லை. பெண்களைத் தாக்க வருகிறவர்கள் திட்டம்போட்டுத்தான் தாக்க வருகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum