தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

Go down

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு Empty பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

Post  ishwarya Thu May 02, 2013 6:05 pm

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மும்பையில் உள்ள அவரது வீடு, அவருக்கு சொந்தமான பாலாஜி டெலிபிலிம்ஸ் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சுமார் 100 அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை நடத்தினர்.

ஏக்தா கபூர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாப கணக்கு தொடர்பாக தவறான அறிக்கை அளித்ததற்காக, இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏக்தா கபூர் மற்றும் அவரது தந்தையும், பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜீதேந்திரா ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தொலைக்காட்சி தொடர்களை ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார். அவரது பாலாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய திரைப்படம் ஒன்று வடாலாவில் படமாக்கப்பட்டு வருகிறது. ஜான் ஆப்ரகாம், கங்கனா ரானத் நடித்துள்ள இப்படம் மே 3-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum