தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

15 வயது பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் ஒப்புதல்

Go down

15 வயது பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் ஒப்புதல் Empty 15 வயது பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் ஒப்புதல்

Post  ishwarya Thu May 02, 2013 5:35 pm

தேவையற்ற கருவை தவிர்க்க பெண்கள் பல்வேறு கருத்தடை முறைகளை கடைபிடிக்கின்றனர். அவற்றில், தனது துணைவருடன் உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரத்திற்குள் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் முறையும் ஒன்றாகும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெண்களின் விருப்பத் தேர்வாக இவ்வகை மாத்திரைகள் உள்ளது.

உடலுறவை எதிர்பார்த்து, சற்று நேரத்திற்கு முன்னர் சாப்பிடும் மாத்திரைக்கு நிகரான பலனை இந்தவகை மாத்திரைகளும் அளிப்பதால், எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகும் பெண்கள், கவலையில்லாமல் மருந்துக் கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உபயோகிக்க தொடங்கினர்.

இதனால், மிக குறைந்த வயதில் பெண்கள் ஆண் துணையை தேடிக்கொள்கிறார்கள் என கருதிய அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில், இவ்வகை மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விற்க தடை விதித்திருந்தது.

இந்த தடையை நீக்கி 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இனி 'பிளான்-பி-ஒன் ஸ்டெப்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை இன்றி வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலை 2.45-மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 5 தீயணைப்பு வண்டிகள் 20 நிமிடத்திற்குள் தீயை கட்டுப்படுத்தினர். இதில் கட்டுப்பாட்டு அறையின் கூரை மற்றும் கம்ப்யூட்டர்கள் சேதம
» விஜய் பட நஷ்ட விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடி உதை… ‘கவுன்சில்’ கலாட்டா!
»  என் வயது 27. அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 45 நாள் சென்றதும் யாரோ விரட்டி அடிப்பதுபோல பிரமை இருந்தது. மனநல டாக்டரிடம் வைத்தியம் பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மருந்து சாப்பிடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லாது அவதிப்படுகிறேன். என்ன செய்ய
» 13 வயது சிறுமியை கற்பளித்த 52 வயது இரு மனைவி காரன்: பெற்றோர் மூடி மறைப்பு!
» முழு மாத்திரையை இரண்டாக்கிச் சாப்பிடலாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum