தி.மு.க பிரமுகர் கடத்தப்பட்ட விவகாரம்: சாத்தூர் ராமச்சந்திரன் சரண் அடைய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Page 1 of 1

விருதுநகர் கூமாபட்டியை சேர்ந்தவர் கோஸ், தி.மு.க பிரமுகர். இவர் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தரும்படி முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் 32 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தாராம். அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக சாத்தூர் ராமச்சந்திரன் மீது கோஸ் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், சாத்தூர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மகன் ரமேஷ், உறவினர் சுப்பாராஜ் ஆகியோர் தூண்டுதலின் பேரில் சிலர் தன்னை கடத்தியதாக கோஸ் கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரும் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்பட 3 பேரும் ஸ்ரீவில்லி புத்தூர் தீண்டாமை ஒழிப்பு தடுப்பு கோர்ட்டில் சரண் அடைய வேண்டும். அப்போது ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஜாமீன் மனுவை கீழ்கோர்ட்டு நீதிபதி விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கி பட விவகாரம்: 'ஏ' சான்றிதழ் கொடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்- தணிக்கை குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

» 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை விவகாரம்: நடிகர் பாக்கியராஜ், சந்தானம் சமரச தீர்வு காண ஐகோர்ட்டு உத்தரவு
» ஒரு தலைக்காதல் விவகாரம்! கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரால் மீட்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum