சென்னை-பெங்களூர் இரண்டு அடுக்கு ஏ.சி.ரெயில் நிரம்பி வழிகிறது: நின்று செல்ல அனுமதி இல்லை
Page 1 of 1

சென்னை-பெங்களூர் இடையே புதிதாக விடப்பட்டுள்ள 2 அடுக்கு மாடி ஏ.சி. ரெயில் நிரம்பி வழிகிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு இரண்டு அடுக்கு ஏ.சி. ரெயில் சமீபத்தில் விடப்பட்டது. முற்றிலும் “குளுகுளு” வசதி கொண்ட இந்த ரெயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டிக்கு 120 வீதம் 1200 பயணிகள் இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம். முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த சொகுசு ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரெயில் விடப்பட்ட முதல் நாளில் 500-க்கும் மேல் பயணிகள் சென்றனர்.
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதி மக்களுக்கு பயன் உள்ள இந்த ரெயில் தற்போது நிரம்பி வழிகிறது. நேற்று அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அதே போல் இன்றும் 10 பெட்டிகளும் நிரம்பியது. இந்த ரெயிலில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்ய முடியாது. காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும் பெட்டியில் நின்று செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை.
சேர்கார் இருக்கைகள் உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். தற்போது கோடை வெயில் வறுத்து எடுத்துவரும் நிலையில் குளு குளு பயணத்தை பொதுமக்கள் விரும்புகிறார்கள். சென்னையில் இருந்து பெங்களூருக்கு கட்டணம் ரூ.470 நிர்ணயிக்கப்பட்டாலும் அதை பெரிதாக நினைக்க வில்லை. பயணத்தின் போது சோர்வு, அசதி ஏற்படாமல் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதால் இரண்டு அடுக்கு ரெயிலில் ஆர்வத்துடன் பயணிக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
» சென்னை மெட்ரோ ரெயில் திட்ட விபத்தில் மீண்டும் ஒருவர் மரணம்
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பெங்களூர் நாளை பலப்பரீட்சை
» ரஞ்சிதா குறித்து சென்னை அபார்ட்மென்டில் பெங்களூர் போலீஸ் விசாரணை!
» நடிகர் விஜய் நடித்த காவலன் படத்தை வெளியிடலாம்: சென்னை ஐகோர்ட்டு அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum