காங்கிரஸ் தலைவர் விடுதலையை கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்
Page 1 of 1

கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அன்று டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. தீவைப்பு சம்பவங்கள் நடந்தது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பாக நானாவதி கமிஷன் பரிந்துரையின்படி அப்போதைய காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கர்கர்டூமா மாவட்ட செசன்சு கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இதில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
சஜ்ஜன் குமார் விடுதலை செய்யப்பட்டதை அறிந்ததும் கோர்ட்டுக்குள் நின்ற கர்நெய்ல்சிங் என்பவர் நீதிபதி ஆர்யன் மீது ஷுவை வீசினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ரகளையில் ஈடுபட்டனர். ஆத்திரம் அடங்காத சீக்கியர்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு டெல்லியில் திலக்நகர் போலீஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்ற சீக்கியர்கள், 1984-ம் ஆண்டு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும், எங்களுக்கு நீதி வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியபடி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல சுபாஷ்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள், நேற்று மதியம் 12.45 மணிக்கு புகுந்த போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீக்கியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளான திலக்நகர், சுபாஷ் நகர் ரெயில் நிலையங்களை மூடி, மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சீக்கியர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு பிறகும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அரசு எங்களுக்கு அநீதி இழைத்து விட்டது. குற்றவாளிகளை விடுதலை செய்ததை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.
இதேபோல காஷ்மீரிலும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். ஜம்மு புறநகர் பகுதியான ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஹர்ஜித்சிங் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் விடுவிக்கப்பட்டதால் சீக்கியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீக்கியர்கள் நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ளனர். டெல்லி கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அவர்கள் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதில் நீதியை எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு கோர்ட்டு அளித்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எங்களுக்கு நீதி வேண்டும். ஆனால் இந்த காங்கிரஸ் ஆட்சியில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்முவில் உள்ள தலப் திலூ என்ற இடத்திலும் சீக்கியர்கள், சஜ்ஜன் விடுதலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த தீர்ப்பால் அனைத்து சீக்கியர்களின் இதயங்களும் குமுறுகின்றன என்று சரண்ஜித்சிங் என்ற போராட்டக்காரர் தெரிவித்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காங்கிரஸ் தலைவர் விடுதலையை கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்

» கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை
» 1984 கலவர வழக்கு: காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுதலை
» கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் விடுதலை: தீர்ப்பு அளித்த நீதிபதி மீது ஷூ வீச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum