பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்
Page 1 of 1
பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்
ஆண்களிடம் சம்பளத்தைக் கேட்காதே... பெண்களிடம் வயதைக் கேட்காதே என்பது பொன்மொழி. இரண்டுக்கும் உண்மையான பதில் கிடைப்பது என்பது அரிது. அதிலும் பெண்கள் பெரும்பாலும், `உங்களின் வயதென்ன?' என்ற கேள்வியை ரசிப்பது கிடையாது. ஒரு பெண்ணிடம் சினேகமாகப் பேசத் தொடங்க விரும்புபவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவே கூடாது.
கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே ஒரு கட்டத்தில் தங்கள் வயதை மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். கண்ணுக்குத் தென்படும் ஒன்றிரண்டு நரைமுடிகளை கவலையோடு மறைக்கிறார்கள். அல்லது கணவரின் `டை'யை ரகசியமாகப் பூசுகிறார்கள், முகச்சுருக்கங்களைப் போக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் `கிரீம்'களை வாங்கி ஆர்வத்தோடு தடவிக்கொள்கிறார்கள், நடையில், உடையில், பாவனையில் ஒரு டீன் ஏஜ் பெண்ணைப் போலவே காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.
ஏன் இந்த அவஸ்தை? பெண்கள் தங்களை வயது குறைந்தவர்களாகக் காட்டிக்கொள்ள மெனக்கெடுவது ஏன்? கண்ணாடி காட்டும் உண்மையை அலங்காரத்தால் பூசி மெழுகிவிட முயல்வது ஏன்? வயதுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு பணம் கூட இரண்டாவது விஷயம்தான். ஒரு பெண்ணின் அகராதியில் அவர்களை மிகவும் பயமுறுத்தும் மூன்றெழுத்து வார்த்தை, `வயது' மிக முக்கியக் காரணம் அது `செக்ஸ்' என்ற மற்றொரு மூன்றெழுத்து வார்த்தையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்துதான் செல்கின்றன. பெண்கள் 20 வயதைத் தாண்டியதுமே `வயது' குறித்துப் பயப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். 35 வயதை எட்டும்போது தங்களின் தாம்பத்திய உறவு ஆர்வம், தங்கள் கவர்ச்சி குறித்து பெண்களுக்குக் குழப்பம் ஏற்பட ஆரம்பிக்கிறது. நாற்பது வயதை எட்டியதும் தங்களுக்கு எல்லாமே முடிந்துவிட்டதாக முடிவு கட்டிவிடுகிறார்கள் என்கிறார் பிரபல பத்திரிக்கையாளர்.
இயற்கையின் மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் பல பெண்களுக்கு இருப்பதில்லை, வயது கூடக் கூட அதிகரிக்கும் அனுபவம், மன முதிர்ச்சி, விசாலமாகும் அறிவு தரும் அழகை பல பெண்கள் உணர்வதில்லை என்கின்றனர், மனோதத்துவ ஆலோசகர்கள். பெரும்பாலான பெண்கள் நடிகைகள் அழகாகவும் இளமையாகவும் இருப்பதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி, `சிலிக்கான் இம்பிளான்ட்' போன்றவற்றைப் பற்றி ஆர்வமாகப் படிக்கிறார்கள்.
அதைப் போல தங்களுக்குச் செய்துகொள்ள வசதியில்லையே என்று மனதுக்குள் குமைகிறார்கள். இளமையும் துடிப்பாகவும் இருக்கும் பெண்கள் எங்கே தங்களைத் தாண்டிச் சென்றுவிடுவார்களோ என்ற பயமும் வயதுப் படிக்கட்டுகளில் பல படிக்கட்டுகளைக் கடந்த பெண்களுக்கு இருக்கிறது.
தங்கள் வயது என்ன என்று பிறரை யோசிக்க வைப்பதில் அவர்களுக்கு ஒரு குறுகுறுப்பான சந்தோஷம் இருக்கிறது. ஆண்களைக் கவர வயதைக் குறைவாகக் காட்டுகிறார்கள். தங்களை இளமையாக காட்டிக் கொள்ளும் இந்த முயற்சியில் முதல்கட்டம் வயதை மறைப்பது தான். அதற்காக தோற்ற அளவிலும் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுகிறார்கள் என்பது உண்மை.
வயதாவது என்பது உயிருள்ள மற்றும் ஜடப்பொருளுக்கும் கூட ஏற்படும் இயற்கையான நிகழ்வு. கடந்து போகும் ஒவ்வொரு நொடிக்கும், ஒவ்வொரு மணிக்கும், ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு ஆண்டுக்கும் நாம் வயதாகிக் கொண்டே இருக்கிறோம். அதை சாதாரணப் பார்வையிலேயே அறிய முடியும். வயதாவது இயற்கையின் உண்மை என்றால், அதை நிறுத்தவோ, தாமதப்படுத்தவோ முடியாது என்பதும் உண்மையே.
வயதைத் திருப்ப முடியாது. விலங்குகளோ, மரங்களோ, செடிகளோ வயதாவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்து கவலைப்படுபவர்கள் மனிதப்பிறவிகளான நாம்தான். ஒவ்வொரு வயதுக்கும் ஓர் அழகும் மரியாதையும் உண்டு. மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள் அதைப் புரிந்து, ஆழமாக உணர்ந்தால் நரைமுடிகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள், மனோதத்துவ ஆலோசகர்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பயம் கண்ணை மறைக்கும்!!!
» ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள்
» கட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்து
» ஆர்.கே.செல்வமணி நடிப்பதை மறைக்கும் இமயம்!
» 60 வயதை கொண்டாடினார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum