கிழக்கில் விடை காண கடையடைப்பு! கண்துடைப்பா? (படங்கள் இணைப்பு)
Page 1 of 1

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக்க் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள, ஹலால் - மற்றும் அபாயாவுக்கெதிராக சாத்வீக முறையில் அநீதிகளைக் கண்டித்து அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகளும்,ஓரிரு அரச நிறுவனங்களைத் தவிர அனைத்து அரச, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு வீதித் தடைகள் ஏற்படுத்தப்படிருந்தன. இராணுவத்தினர் பின்னர் வீதித் தடைகளை நீக்கி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். (மருதமுனைப் பிரதேச கடையடைப்பில் பிடிக்கப்பட்ட படங்கள் கீழுள்ளன.)
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
‘சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையில் நிலவும் சமாதான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்போரை சட்டத்திற்கு முன் நிறுத்து!, இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாதக் கெடுபிடிகளை உடன் நிறுத்து!, முஸ்லிம்களின் வாழ்வியல் கலாசார விழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதே!, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த எதிர்ப்புப் பேரணி அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டன.
கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் உரிமைகள் அமைப்பு (எம்.ஆர்.ஓ) மற்றும் சில அமைப்புக்களும் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.
இது இவ்வாறிருக்க, நாட்டின் ஏனைய பகுதிகளில் கடையடைப்புப் பற்றிக் கேள்வியுற்ற பாதுகாப்புப் பிரிவினர் கடைகளை அடைக்க வேண்டாம் என பள்ளிவாசல் நிருவாகத்தினரிடமும், முக்கிய நபர்களிடமும் கேட்டுள்ளன. எனவே, நாட்டில் அமைதியைக் காக்கும் முகமாக அவர்களால் வழமைபோல் கொடுக்கல் - வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கடையடைப்புப் போராட்டம் பற்றிக் கேள்வியுற்ற பொது பல சேனா இயக்கத்தின் தலைவர் போராட்டம் நடாத்தக் கூடிய கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், சிங்கப்பூரில் இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றும் பேரியல் அஷ்ரபை நாட்டுக்கு அழைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று பாணந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, தலைமைத் தேரர், பேரியல் அஷ்ரப் சிங்கப்பூரில் இருந்துகொண்டு இலங்கை பௌத்தர்களுக்கு எதிராகச் செயற்படுவதாகவும், அங்கு இலங்கையர்களை நோக்கி இவ்வருடப் புதுவருடத்தை சிங்கள பௌத்த ஆண்டாக்க் கொண்டாடாமல் இலங்கை விழாவாக்க் கொண்டாடுமாறும் கூறியிருக்கின்றார். அவர் அவ்வாறு சொல்வதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ள தேர்ர், அஷ்ரப் ஏலவே இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டவர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செக்கட்ரிக்கு முத்தமிட்ட பாடசாலை அதிபர்! (படங்கள் இணைப்பு)
» தமிழ் பெண்கள் இராணுவம் சேவைக்கு தயார்!(படங்கள் இணைப்பு)
» இலங்கையின் மரதன் ஓட்டவீரருக்கு இலண்டனில் பெரும் பாராட்டு! (படங்கள் இணைப்பு)
» மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது!(படங்கள் இணைப்பு)
» பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மறைவு (படங்கள் இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum