தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது!(படங்கள் இணைப்பு)

Go down

மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது!(படங்கள் இணைப்பு) Empty மத்தல சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது!(படங்கள் இணைப்பு)

Post  ishwarya Thu May 02, 2013 1:01 pm

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று (18.03.2013) காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை, மத்தல விமான நிலைய சேவைக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட 'சிடி ஒப் மாகம் றுஹுணுபுற' விமானமும் இன்று முதன்முறையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் இவ்விமானத்திலேயே ஜனாதிபதி,மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதை விமான பாதை உள்ளடங்கலாக அமைக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள மிகப்பெரிய விமானமான ஏயார் பஸ் 380 ரக விமானத்தைத் தரையிறக்கக் கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையத்தில், பயணிகள் சேவை, பொதிகள் சேவை, சரக்குகளைக் கையாளும் சேவை என்பனவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் : சர்வதேச விமான நிலையம் தகவல்
»  முன்னாள் பா.உ அமரர் தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
» மத்தல விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!
» ‘ஐஃபா’..ஜெனிலியா…விமான நிலையம் சென்றவர் உடனே திரும்பிவிட்டாராம்!
» ஒளிப் படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவற்றை திறந்து பார்க்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum