தனியாக செல்லும் பெண்களுக்கு
Page 1 of 1
தனியாக செல்லும் பெண்களுக்கு
பெண்கள் தனியாகப் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. அவர்களின் தைரியத்தைப் பாராட்டும் அதே நேரம், வெளியூருக்குத் தனியாகச் செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதற்கான விஷயங்கள் இங்கே:
1 உங்களின் சுற்றுச்சூழல், உங்களை சுற்றியுள்ள நபர்கள் குறித்துக் கவனமாயிருங்கள். அதற்காக எப்போதும் பீதியிலேயே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் மற்றவர்களில் ஒருவர் உங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார் என்றாலோ, திரும்பத் திரும்ப ஒரு முகம் ஆங்காங்கே தோன்றுகிறது என்றாலோ எச்சரிக்கையாகிவிடுங்கள்.
2 முன்பின் தெரியாத இடங்களில் ஒரு பெண் தனது உள்ளுணர்வை நம்புவது நல்லது. குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழி கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவர் நட்புமுகம் காட்டுவது நன்மை செய்யவா அல்லது வேறு மாதிரியா என்று உள்ளுக்குள் ஒரு மணி அடிக்கும். `அலர்ட்' ஆகிவிடுங்கள்.
3 புதிய இடங்களுக்கு செல்கையில் ஒரு வழிகாட்டிக் கையேடு நல்ல துணைவனாக இருக்கும். அந்தப் பகுதியின் தெருக்கள், கலாசாரம் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். தங்குவதற்கு சிறந்த இடம், எங்கே என்ன வாங்கலாம் என்பது போன்ற தகவல்களையும் `கைடு புக்' தரும்.
4 மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலே பயணப்படுங்கள். இது ரொம்ப காலமாக சொல்லப்படுவதுதான். ஆனால் அதிகம் புறக்கணிப்படுவதும் இதுதான். பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள் பாதுகாப்பானவை. அப்போது மக்களோடு மக்களாகக் கலந்துவிடலாம். ஏதாவது உடனடி உதவி தேவை என்றாலும் கிடைக்கும்.
5 சூட்கேஸ் மற்றும் பைகளில் உங்கள் முகவரியை எழுதுகிறீர்கள் என்றால், அது `பளிச்'சென்று தெரியும்படி இருக்க வேண்டாம். அத்துடன், சொந்த வீட்டு முகவரிக்குப் பதிலாக நீங்கள் பணிபுரியும் அலுவலக முகவரியை எழுதிவையுங்கள். புதிய இடத்தில் நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம். முக்கியமான பொருட்களை ஓட்டல் பாதுகாப்பறையிலேயே விட்டுச் செல்லுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தனியாக பயணம் செய்யும பெண்களுக்கு அட்வைஸ்
» தனியாக பயணம் செய்யும பெண்களுக்கு அட்வைஸ்
» பெண்களே மருத்துவமனைக்கு தனியாக செல்லாதீர்
» புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு.......
» வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு!
» தனியாக பயணம் செய்யும பெண்களுக்கு அட்வைஸ்
» பெண்களே மருத்துவமனைக்கு தனியாக செல்லாதீர்
» புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு.......
» வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum