தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொதுவான தர்ப்பண விதிகள்

Go down

பொதுவான தர்ப்பண விதிகள்  Empty பொதுவான தர்ப்பண விதிகள்

Post  gandhimathi Tue Jan 22, 2013 12:44 pm




1. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, ஸப்தமி, அஷ்டமி, சுக்ல பசஷத்ரயோதசி, ஜன்மநசஷத்ரம், இரவு, இரு ஸந்த்யா முதலிய காலங்களில் எள்ளுடன் அசஷதையைச் சேர்த்துத் தர்ப்பணம் செய்யவேண்டும்.

2. சிலர் நெற்றிக்குப் விபூதி அணிந்து தர்ப்பணம் செய்வர். சிலர் அணியாமல் செய்வர். சிலர் தர்ப்பைகளை வளைத்து கூர்ச்சமாகச் செய்து அதில் தர்ப்பணம் செய்வர். சிலர் தர்ப்பைகளை அப்படியே பரப்பி அதன் மேல் செய்வர். சிலர் பித்ரு வர்க்கத்திற்கும் மாத்ரு வர்க்கத்திற்கும் தனித்தனி கூர்ச்சங்களில் செய்வர். சிலர் ஒரே கூர்ச்சத்தில் செய்வர். இவையெல்லாம் அவரவர் ஸம்ப்ர தாயத்தைப் பொறுத்தது.

3. கிரகண தர்ப்பணம் தவிர மற்ற தர்ப்பணங்களெல்லாம் மாத்யான்ஹிகம் செய்து விட்டு உச்சி வேளைக்குப் பின் செய்வது உத்தமம்.

4. யற்ஞவராஹ மூர்த்தியாக அவதரித்த மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து கருப்பு எள்ளும், தர்ப்பையும் உண்டாயிற்று என்பதால் எள்ளும், தர்ப்பையும் புனிதம் மிக்கவை. தீயசக்திகள் அவைகளைக் கண்டு அஞ்சும். ஆகையால், தர்ப்பையை ஆசனமாகவும், பவித்ரமாகவும், கூர்ச்சமாகவும் உபயோகிக்கிறோம். பித்ரு கர்மாக்களில் மூன்று தர்ப்பைகளிலும் தேவகாரியங்களில் இரண்டு தர்ப்பைகளிலும் பவித்திரம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். பவித்திரத்தைக் கையிலிருந்து எடுத்தால் பூமியில் வைக்கக்கூடாது. வலது காதில் வைத்துக் கொள்ளவேண்டும்.

5. தர்ப்பணத்திற்கு எள்ளை எடுக்கும்போது ஆள்காட்டி விரலால் தொடாமல் கட்டை விரலை மற்ற விரல்களுடன் சேர்த்து எடுக்கவேண்டும். கட்டை விரலுடன் ஆள் காட்டி விரல் சேர்ந்தால் ராசஷஸ முத்திரை எனப்படும்.

6. வீட்டில் தர்ப்பணம் செய்யும்போது தேவ பூஜா ஸ்தானத்திலிருந்து சற்று விலகிச் சுத்தமான இடத்தில் அமர்ந்து ஒரு அகலமான தாம்பளத்தில் தர்ப்பையைப் பரப்பி அதன் மேல் தர்ப்பணம் செய்யவேண்டும். வெள்ளித் தாம்பாளம் உயர்ந்தது. ஆனால், அது சாப்பிடும் தட்டாக இருக்கக்கூடாது. அடுத்தபடி தாமிரமும், பித்தளையும் நல்லது. வெண்கலத்தட்டும், ஈயம் பூசின தட்டும் விலக்கப்பட வேண்டும். v
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum