அதிசயிக்க வைத்த விளக்குகள்
Page 1 of 1
அதிசயிக்க வைத்த விளக்குகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதர் கருவறை ஒரு காலத்தில் 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. காரணம், அந்நியர் படையெடுப்புதான். கி.பி.1330-ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது மீனாட்சி அம்மன் சிலையையும், சுந்தரேசுவரர் சிலையையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது.
அதை தடுக்க நினைத்த கோவில் ஸ்தானிகர்கள், கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன் மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர். கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் மற்றொரு சிவலிங்கத்தை வைத்தனர்.
அன்னியர்கள் அந்தச் சிலைதான் சுந்தரேசுவரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டியே உள்ளது. சுந்தரேசுவரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. கம்பண்ணர் என்ற வீரர் அந்நியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார்.
அப்போது, சிவலிங்கத்தின் மீது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசி யது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டு இருந்தன. அதைப் பார்த்த பக்தர்கள் அதிசயித்துப் போனார்கள். சொக்க நாதரின் மகிமையை எண்ணி மகிழ்ந்தனர்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அதிசயிக்க வைத்த விளக்குகள்
» தேங்காய் விளக்குகள்
» கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து!
» உலக ஒளி விளக்குகள்
» கலைஉலக ஒளி விளக்குகள்
» தேங்காய் விளக்குகள்
» கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து!
» உலக ஒளி விளக்குகள்
» கலைஉலக ஒளி விளக்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum