ஆடிப் பெருக்கு அன்று புதுத்தாலி மாற்றுவது ஏன்?
Page 1 of 1
ஆடிப் பெருக்கு அன்று புதுத்தாலி மாற்றுவது ஏன்?
ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப பழைய காலத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆணி இந்த மூன்று மாதங்களில் இருக்கக் கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம்- வரும் இந்த புது வெள்ளத்துடன் வரக் கூடியதுதான் ஆடிப் பெருக்கு.
சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது.
நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது.
இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்வது செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
» ஆடிப் பண்டிகை
» ஆடிப் பண்டிகை
» ஆடிப் பண்டிகை
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
» ஆடிப் பண்டிகை
» ஆடிப் பண்டிகை
» ஆடிப் பண்டிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum