ஆடிப் பண்டிகை
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
ஆடிப் பண்டிகை
ஆடி மாதம் வந்து விட்டாலோ தொடர்ந்து பண்டிகைகள் தான். ஆடிப் பண்டிகைக்கு அதாவது ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய்ப்பால் காய்ச்சுவது வழக்கம். கல்யாணமான முதல் வருடம் புது மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு வரவழைத்து வெள்ளி டம்ளரில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கொடுப்பது வழக்கம். கூடவே பருப்புத் தேங்காய், வேட்டி, சட்டை ஆகியவையும் கொடுக்கப்படும்.
அதே மாதிரி மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குப் புடவை வாங்கித் தருவார்கள். ஆடிப் பிறப்பன்று தேங்காய்ப்பால், தயிர் பச்சடி, கோசுமல்லி, கூட்டு, பொரியல், மோர்க் குழம்பு, ஆமைவடை, பொரித்த அப்பலம் ஆகியவை விருந்தில் இடம் பெறும். ஆடி பிறந்து அடுத்த பதினெட்டாம் நாள் விசேஷமாகக் கொண்டாடப்படும் பண்டிகை `பதினெட்டாம் பெருக்கு' காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரும் அன்றையதினம் வீடுகளில் பலவகை சித்ரான்னங்கள், பொங்கல், பாயசம் ஆகியவற்றை செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்.
காவிரிக் கரையோர ஊர்களில் குடியிருப்பவர்கள் கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு போய் காவேரியம்மனைக் கும்பிட்டு விட்டுச் சாப்பிடுவார்கள். `பதினெட்டாம் பெருக்கு' அன்று வீட்டில் சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், எலுமிச்சை சாதம் போன்று குறைந்தது நாலு வகை சாதம் செய்ய வேண்டும். மற்றபடி பாயசம், வடை, வற்றல், அப்பளம், கருவடாம் வகைகளும் உண்டு.
ஆடி, அம்மனுக்கு உகந்த மாதமானது. அம்பிகையை ஆராதித்து விதவிதமான பூஜை, புனஸ்காரங்கள், வழிபாடுகள், நிவேதனங்கள் என்று கொண்டாடுவது ஆடி மாதத்தில் தான். இந்த ஆடி மாதத்திற்கான சில விசேஷ உணவு வகைகள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஆடிப் பண்டிகை
» ஆடிப் பண்டிகை
» ஆடிப் பண்டிகை
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
» ஆடிப் பண்டிகை
» ஆடிப் பண்டிகை
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
» சென்னை கோவில்களில் ஆடிப் பெருவிழா
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum