தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மின்சாரக் கட்டண உயர்வுக்கு நான் மட்டும் ஏன் பதில் சொல்ல வேண்டும்? - கெஹெலிய

Go down

மின்சாரக் கட்டண உயர்வுக்கு நான் மட்டும் ஏன் பதில் சொல்ல வேண்டும்? - கெஹெலிய Empty மின்சாரக் கட்டண உயர்வுக்கு நான் மட்டும் ஏன் பதில் சொல்ல வேண்டும்? - கெஹெலிய

Post  ishwarya Tue Apr 30, 2013 12:44 pm

‘மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கான முடிவு அரசாங்கம் ஒன்றிணைந்தே எடுக்கப்பட்டது. அதனது பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது. நான் மட்டும் ஏன் அதற்கு பதில் சொல்ல வேண்டும்?’ என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிடுகிறார்.

‘இது தொடர்பாக இரண்டு ஆண்டுகள்கலந்துரையாடினோம். பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சகலருக்கும் மின்சாரம் எனும் திட்டத்தின் கீழ் 90% மின்சாரத்தை அதிகரித்தோம். அவ்வாறு செய்யாதிருந்தால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்காது’

‘இந்தியா, பாகிஸ்தான் முதலிய நாடுகள், அந்நாடுகளில் தினந்தோறும் 08 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்துகின்றது. இலங்கையிலும் அவ்வாறு செய்தால் மின்கட்டணத்தை அதிகரிக்கத் தேவையில்லை.‘ என்றும் அமைச்சர் தெளிவுறுத்துகிறார்.

‘மின்சாரத் திணைக்களத்தின் அசமந்த போக்கினாலேயே நட்டம் ஏற்படுகின்றது. என்று குறிப்பிடுகின்றனர். ஆயினும், 1993 ஆம் ஆண்டு அரசாங்கம், சர்வதேச கடன் வழங்கும் அமைப்புடன் ஏற்படுத்திக்கொண்ட நீண்ட கால ஒப்பந்தத்தினால் தனியாரிடமிருந்து அலகுக்கு 25 - 30 ரூபாவுக்குப் பெற்றுக் கொண்ட மின்சாரத்தை பொதுமக்கள் பாவனைக்காக அலகு ரூபா 7.50 பெற்றுக் கொடுக்க வேண்டியேற்பட்டது. அதனால் மின்சார சபை பாரியதொரு நட்டத்தைச் சந்தித்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி, எந்தவொரு மின்சாரத் திட்டத்திற்கும் அரசாங்கத்திற்கு பணவொதுக்கீடு செய்ய முடியாமற் போனது. அதைப்போல, தனியாரிடமிருந்து மின்சாரத்தை பாரிய தொகை கொடுத்து வாங்கவேண்டிய வேண்டியேற்பட்டது. தற்போது காலக்கெடு முடிவடைந்து வருகின்றது. நுரைச்சோலை, கொத்மலை, சாம்பூர் மின் நிலையங்களிலிருந்து இன்னும் அதிகமான அலகுகள் கிடைக்கவுள்ளன. அதன்பின்னர் மின்கட்டணத்தைக் குறைக்கலாம்.’ எனவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

மின்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானதே. எதிர்வரும் ஜனவரி மாதம் வரை எக்காரணம் கொண்டும் மின்கட்டணம் குறைக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கண் சிகிச்சையால் பார்வை இழப்பு: அசின் பதில் சொல்ல வேண்டும் – மே 17 இயக்கம்
» இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? – பாலா
» யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை-நயன்தாரா
» நயனுடன் திருமணம் எப்போது? பதில் சொல்ல பிரபுதேவா மறுப்பு!!
» மீடியாவில் ஆயிரம் பேசிக்குவாங்க.. அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum